spot_img
HomeCinema Reviewஜிப்ஸி விமர்சனம்

ஜிப்ஸி விமர்சனம்

காஷ்மீரில் பிறந்து வளர்ந்த ஜிப்ஸி போரில் பெற்றோரை இழக்க குதிரைக்காரர் ஒருவரால் வளர்க்கப்படுகிறார். அவரும் இறக்கவே ஜிப்ஸி குதிரையை வைத்து வேடிக்கை காட்டி பிழைப்பு நடத்துகிறார். ஊர், ஊராக சுற்றும் ஜிப்ஸி நாகூருக்கு வரும்போது வஹீதா மீது காதல் ஏற்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த வஹீதாவுக்கு ஜிப்ஸி மீது காதல் வர இருவரும் ஊரை விட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்.
நாடோடி தென்றலாக வடமாநிலங்களில் பயணிக்கும் இவர்களின் காதல் கதையில் மத கலவரம் ஏற்படுத்தும் பயங்கரத்தின் நிதர்சனம் இப்போதும் சமூகத்தில் நடப்பதை கண் முன்னே கொண்டு வந்து சென்ற காட்சிகள்  தமிழக கர்நாடக எல்லையில் காவேரியை வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் கலவர காட்சியில் தொடங்கும் இத்திரைப்படம், முடியும் வரை  மத அரசியலையும்….. அதற்காக  நடத்தப்படும் கலவரங்களையும்….. சமகால அரசியல் சூழலையும் காட்சிக்கு காட்சி சொல்கிறது
ஜீவா ஜொலித்திருக்கிறார், அவரை திரையில் காணும் போதெல்லாம் நம்மை ஆட்கொள்கிறார், குழந்தையை வைத்துக்கொண்டு தன்னை தந்தையாக அவரே அறிவித்துக் கொள்ள தவிக்கும் காட்சிகளில் கண்களை சற்று ஈரம் ஆக்குகிறார்.கதாநாயகி மதரீதியாக முஸ்லீம்

தந்தையால் பாதுகாப்பு என்ற பெயரில் ஒடுக்கப்படுவதாக முற்பாதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் முஸ்லீம் மதக்கோட்பாட்டின்படி நாயகனும் நாயகியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இது எந்த மாதிரியான மத எதிர்ப்பு என்ற குழப்பம் வருகிறது

மதவாத அரசியல் கோலோச்சியிருக்கும் தற்கால இந்தியாவில் ஜிப்ஸி என்ற மதச்சார்பின்மை படத்தை எடுத்து வெளியிட்டது மிகப்பெரிய புரட்சிதான் மதவாத இயக்கங்களின்தீவிரவாதக் கலவரங்கள் சாதாரண மனிதனின் அடிப்படை வாழ்வியலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது
மனிதம் ஒன்றே மக்களை இணைக்கும் ஆயுதம் என்பதை அருமையாய் வலியுறுத்துகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img