spot_img
HomeNews“Jiosaavn நிறுவனத்தின்  RJ பாலாஜி தொகுத்து வழங்கும் Mind voice “ நிகழ்ச்சி ! 

“Jiosaavn நிறுவனத்தின்  RJ பாலாஜி தொகுத்து வழங்கும் Mind voice “ நிகழ்ச்சி ! 

இணைய ரேடியோ உலகில் நேயர்கள் விருப்பமாகும் “Jiosaavn நிறுவனத்தின்  RJ பாலாஜி தொகுத்து வழங்கும் Mind voice “ நிகழ்ச்சி ! 
 

சிறந்த மனஅழுத்த நீக்கியாக, எந்த சூழ்நிலையிலும் புத்துணர்ச்சியை தூண்டி, நம்மை முற்றிலும் புதிய சிந்தனைக்கு அழைத்து சென்று, குதூகலப்படுத்தும் நிகழ்ச்சியாக நேயர்கள் விரும்பி கேட்கும் நிகழ்ச்சியாக Jiosaavn மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரத்யேகமாக RJ பாலாஜி தொகுத்து வழங்கும் Mind voice நிகழ்ச்சி உருவெடுத்திருக்கிறது. Jiosaavnல்  புதன் கிழமை தோறும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. RJ பாலாஜி தனது சிறப்பான பகடியுடன்  கலந்து தர நேயர்களின் முதல்விருப்பமாக முன்னணி நிகழ்ச்சியாக உருவெடுத்திருக்கிறது. ரசிகர்களின் கருத்துகளில் இருந்தே   RJ பாலாஜி இந்நிகழ்ச்சியை கட்டமைத்து தருகிறார்.

எபிஸோட் -1

உங்கள் வீட்டின் குளிர்பதன சாதனத்தில் என்ன உள்ளது ?

Jiosaavn மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரத்யேகமாக RJ பாலாஜி தொகுத்து வழங்கும் Mind voice நிகழ்ச்சியின் முதல் எபிஸோடில் ரசிகர்களுடன் எல்லாவற்றிலும் இருந்து சிறிது நேரம் விடைபெற்று கொள்வோம். என்னிடம் உரையாடுங்கள் எனக்கூறி, ரசிகர்களை சமூக அரசியல் பிரச்சனைகளில் இருந்து விலகி, தன்னிடம் எளிமையான கேள்விகள் கேட்டு உரையாடலாம் என ஒரு  11 நிமிட உற்சாக பொழுதுபோக்கு உரையாடலை நிகழ்த்தினார் RJ பாலாஜி. சில சமயம் மிக எளிய கேள்விகள் நம் வாழ்வின் பார்வையை, பாதையை மாற்றிவிடும். திடீரென கேட்கப்படும் உங்கள் குளிர்சாதன பெட்டியில் என்ன இருக்கிறது என்கிற கேள்வி  பலரையும்  திக்குமுக்காட செய்து நிசப்தமாக்கிவிடும். ரசிகர்களுடன் இந்த கேள்விகளை கேட்டு பதில் வாங்கிய உரையாடலில் தனது கல்லூரி நாட்களின் மறக்க முடியாத காமிக் தருணங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் உரையாடலில் ரசிகர்கள் பேச்சு வழக்கு, இலக்கண பிழைகள், ஆங்கிலம் புரியா ரசிகர்களின் பேச்சுகள் புன்னகை வரவழைப்பதாக அமைந்திருக்கிறது.

எபிஸோட் 2
அறியாமை சில நேரம் வரம்

சில நேரம் எதிர்மறைத்தனமைக்கு எதிராக நாம் அறியாமையுடன் இருப்பது நமக்கு வரமாகும். ஏனெனில் அது நம்  மனதிற்கு  பெரும் அமைதியை  தரும். இணையம் மூலம் அனைத்து செய்திகளும் நம் மூளையை ஆக்கிரமிக்கும் இந்த காலத்தில் இந்த மறைமுக உண்மையை நிகழ்ச்சியின் கருவாக எடுத்து செய்திருக்கிறார் RJ பாலாஜி. சில நிஜ உலக சம்பவங்கள் இந்த உண்மையை பறை சாற்றுவதாக அமைந்திருக்கிறது. ஒரு ஆவணப்படம் ஊடக செய்திகள்  அமெரிக்க, கனட மக்கள்  வாழ்வில் ஏற்படுத்தும் பெரும் பாதிப்புகளை கூறுகிறது. RJ பாலாஜி தனது வாழ்வில் சிரபுஞ்சி மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களை சந்திக்க, டிமானிடைசேசன் எனும் பணமதிப்பிழப்பு பற்றி எந்த வித அறிவும் இல்லாமல் அவர்கள்  சந்தோஷமாக இருந்தது, அவரது  வாழ்வில் எத்தகைய  பாதிப்பை ஏற்படுத்தியது என்பது பற்றி நிகழ்ச்சியில் உரையாடியுள்ளார்.

எபிஸோட் 3

கோலிவுட் கொண்டாட்டம்

21 நாட்களை கடந்த  இந்த Mind voice நிகழ்ச்சியில் நேயர்களின் அறிவுறுத்தல் மற்றும் விருப்பப்படி தமிழ் சினிமா கொண்டாட்டமாக அமைந்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து பட வெற்றி கொண்டாட்டம், ரிலீஸ் கொண்டாட்டம். பிரபலங்களின் பிறந்த நாள் கொண்டாட்டம், விமர்சகர்களை மிஞ்சி வியப்பில் ஆழ்த்தும் சமூக ஊடக விமர்சகர்களின் பார்வைகள் என  பலவற்றையும் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

எபிஸோட் – 4

பழைய நினைவுகளை கிளறும் அரையாண்டு கால தேர்வுகள்

80 மற்றும் 90 கால கிட்ஸ்களின் நினவலைகளில் ஒரு அட்டகாசமான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது இதில் RJ பாலாஜி  நம் பள்ளி கால தேர்வு முறைகள், விடுமுறை கொண்டாட்டங்கள் பெரும் கனவாக இருந்ததை இந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

எபிஸோட் – 6

ஏலக்காய் குறிப்புகள்

கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்வான இந்நிகழச்சியில் RJ பாலாஜி தனது நினைவலையில் முன்பு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட கேசரியில் ஏலக்காய் கடித்து அதிர்ச்சியடைந்த நிகழ்வை பேசியிருக்கிறார். இதுவும் 80 மற்றும் 90 கிட்ஸ்களின் நினவை கிளறும் நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது. அப்போது பெரும் கொண்டாட்டமாக இருந்த விழா நாட்கள் இப்போது வெறும் விடுமுறை கொண்டாட்டமாக மாறி விட்டதை பற்றி பேசியுள்ளார்.

எபிஸோட் -7

அப்துல் கலாம் அவர்களின் 2020 வல்லரசு கனவு

பள்ளிகாலத்தில் அனைவரின் மனதிலும் பெரும் பாதிப்பை தந்த அப்துல் கலாம் அவர்களின் வரலாற்று சொல்லாடலாக இருந்த 2020 வல்லரசு கனவு இப்போது எந்த வகையில் இருக்கிறது. பலரும் அப்போது 2020 என்பது பறக்கும் கார், பளபளக்கும் இந்தியா என்ற கனவாக இருக்க, நிஜம் இப்போது எப்படி இருக்கிறது. இதனுடன் தனது மியாமி, பூடான் பயணத்தின் நினைவூட்டலின் வழியே மனிதம் பற்றிய பெரும் கேள்விகளை எழுப்பும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

எபிஸோட் -8

என்றென்றும் இசை நாயகன் ஏ ஆர் ரஹ்மான்

இந்நிகழச்சி குழந்தை பருவ மறக்க முடியா நினைவலைளை பேசிவதாக அமைந்துள்ளது. குழந்தை பருவத்தில் தந்தையை நாயகனாக மனதில்  வரித்துகொண்டதில் ஆரம்பித்து தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தியது, டயரி எழுதியது போன்ற முதல் கொண்டாட்ட நினைவலைகளுடன் என்னென்றும் நாயகனாக மாறிப்போன ஏ ஆர் ரஹ்மான் நினைவுகள் போற்றி உரையாடியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு சிறப்பு செய்வதாக 99 ரூபாய்  கேஸட்டில் “மின்சார கனவு” ஆடியோ பாடல் மற்றும் “ஜீன்ஸ்” பட பாடல்கள் வாங்கியது, பள்ளியில் ஒரு கேஸட்டில் ஒரு புறம் “கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்” மறுபுறம் “அலைபாயுதே” பதிந்து வைத்திருப்பவர் பிரபலமாக இருந்தது முதல், மெட்ராஸ் மொசார்ட் ஏ ஆர் ரஹ்மான் அவர்களை போற்றும் ஒரு நிகழ்ச்சியாக இது  அமைந்திருக்கிறது.

எபிஸோட் -9

தீபிகா படுகோனின் கிரடிட் கார்ட் கேள்விகள்

பொங்கல் கொண்டட்ட நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் நாகர்கோயில் முதல் சென்னை வரை நிரம்பியிருக்கும் தீபிகா படுகோன் சர்ர்சைகள் குறித்து அவரின் கிரடிட் கார்ட் உங்களுக்கு  தேவையா ? எனும் கேள்விக்கு நகைச்சுவை பதில் தந்து நிகழ்ச்சியை சுவராஸ்யபடுத்தி வழங்கியுள்ளார்  RJ பாலாஜி.

எபிஸோட் 10
தாய் மொழி மீதான காதல்

இந்நிகழ்ச்சியில் தனது சமீபத்திய ஜப்பான் பயண அனுபவங்களை கூறுகிறார்  RJ பாலாஜி. நம் நாட்டையும் அவர்களையும் ஒப்பிடாமல் அங்கே கற்றுக்கொண்ட அழகான விடயத்தை பகிர்கிறார். நம் தாய் மொழியை காதலித்து மேம்படுத்தி பேணுவதை தவிர்த்து  மற்ற மொழியை கடினப்பட்டு பேசுவதை குறித்து உரையாடுகிறார்.

எபிஸோட் – 11

விடை பெறும் விழாக்கால கொண்டாட்டமும்,  குளிர்கால விடுமுறை கொண்டாட்டமும்

ஜனவரி எப்போதும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் விழாக்கால கொண்டாட்டத்தையும், குளிர்கால விடுமுறையும் மனதில் இருத்தி மகிழ்ச்சியை தரும். ஆனால் இது விடை பெறும் காலம். இதனையடுத்து ஷாப்பிங் நேரத்தில் அம்மாவிடம் அடம்பிடித்தது அடிவாங்கியது, ரோஸ்மில்க் மூலம்  சமாதானம் ஆனதையும் அடுத்து நம் எல்லோருக்கும் நெருக்கமான  மற்றுமொரு விசயத்தையும் இந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

எபிஸோட் -13

ஸ்பென்ஷர் பிளாசாவின் ஸாஃப்டி ஐஸ்க்ரீம்

காதலர் தினத்திற்கு முந்தைய வாரத்தில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் சில சினிமாக்களில் கலாச்சார கேடாக காட்டப்படும் ஸ்பென்ஷர் பிளாசா ஒரு காலத்தில் 5 ரூபாய்க்கு ஸாஃப்டி ஐஸ் க்ரீம், எஸ்கலேட்டர் என கனவுப்பிரதேசமாக,  குழந்தைகளின் பெரும் கனவாக, உற்சாகம் தரும் இடமாக, சென்னையின் பிரபல இடமாக இருந்ததை பேசுகிறார்.

எபிஸோட் – 13

RJ பாலாஜியின் 96 காதலின்  நகைச்சுவை பதிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதல் படம் “96” 90 கிட்ஸ்கள் பலரது வாழ்வின் பழைய நினைவுகளை மீட்டெடுக்க, தனது முதல் காதலின் “96” நகைச்சுவை வடிவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

எபிஸோட் – 14

கேரளா வீட்டு பெரும் திருமண கொண்டாட்டம்

பெரும் பகடியுடன் நகைச்சுவை பொங்க கூறினாலும் நம் நாட்டுக்கு மிகவும் அவசியமான விசயத்தை இதில் பேசியுள்ளார். மண வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஆணும், பெண்ணும் தேவையே இல்லாமல் பேச்சுலர் பார்ட்டி சங்கீத் என திருமணத்திற்காக 50 லட்சம் வரை வீணாக செலவு செய்வதை பற்றி இதில் பேசுகிறார்.

எபிஸோட் – 15

நமக்கு தேவை அமைதி

அமைதி நம் நாட்டில் தற்போதைய தேவை. வடக்கிழிருந்து தென்பகுதி வரை மத சண்டைகள் பெருகி வருவது கவலையளிப்பதாக இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் பேண வேண்டியது அமைதியை தான் எனக்கூறும் RJ பாலாஜி,  உடனே பூடான் மன்னர் தனது பிறந்த நாளில் தெரு நாயை தத்தெடுத்துகொள்ள தனது மக்களை பணிக்க,  அது பெரும் மாற்றத்தை கொண்டு வந்ததை பகிர்ந்து கொண்டுள்ளார்

Must Read

spot_img