spot_img
HomeNewsகேப்டன் விமர்சனம்

கேப்டன் விமர்சனம்

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள  எல்லையில், சில அபாயகரமான நிகழ்வுகள் நடக்கின்றன. அது ஒரு அடர்ந்த காட்டுப்பகுதி. அந்த காட்டுப்பகுதிக்கு செல்லும் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.

எதிரிகள் எங்கிருந்தாலும், எப்படிப்பட்ட இடத்தில் இருந்தாலும் தன்னுடைய டீமுடன் திறமையாக செயல்பட்டு வீழ்த்தி வருகிறார் ஆர்யா.

மீண்டும் இந்த டீமிடம் ஒரு மிகப்பெரிய மிஷின் ஒப்படைகிறார்கள். அவர்களை ‘விலங்குகள் பாதி மனிதர்கள் பாதி’ தோற்றம் கொண்ட ‘மெனட்டோஸ்’ என்ற ராட்சச மிருகங்கள் தாக்குகின்றன.

மனிதர்களை காட்டிலும் அதிக பலம் கொண்ட அந்த விலங்குகளுக்கும், ஆர்யா தலைமையிலான ராணுவ வீரர்களுக்கும் யுத்தம் நடக்கிறது.

இதன் பின் ஆர்யாவின் டீமுக்கு என்ன நடந்தது? ஆர்யாவின் கண்ணில் பட்டது என்ன? இந்த பிரச்சனைகளை ஆர்யா தன்னுடைய டீமுடன் எப்படி எதிர்கொண்டார்? கடைசியில் நடப்பது என்ன? என்பது தான் படத்தின் கதை.

.

ராணுவ கேப்டனாக ஆர்யா சிறப்பாக நடித்திருக்கிறார். இவரை அடுத்து ஹரிஷ் உத்தமன் தனது கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்களுடன் கோகுல்நாத், பரத்ராஜ், காவியா செட்டி காதலி ஐஸ்வர்யா லட்சுமி, களையாக இருக்கிறார்.

அடர்ந்த காடுகளையும் ஒளிப்பதிவாளர் யுவராஜ் படமாக்கியிருக்கும் விதம், பிரமிப்பு.

நடிகை சிம்ரன் கதாபாத்திரம் வில்லத்தனமானது நடிப்பில் வித்தியாசம் காட்ட விட்டாலும் அந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தி

இருக்கிறது சி ஜி வொர்க்கில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ஆங்கில படத்துக்கு இணையாக பேசப்பட்டிருக்கும்

மழையில் நடக்கும் இறுதி கிளைமாக்ஸ் காட்சி வெள்ளை பேப்பரில் பென்சிலால் கோடு போட்டது போல இருக்கிறது

கேப்டன் டன்

Must Read

spot_img