spot_img
HomeNewsசூர்ப்பனகை திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளை எஸ்பி சினிமாஸ் வாங்கியுள்ளது

சூர்ப்பனகை திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளை எஸ்பி சினிமாஸ் வாங்கியுள்ளது

திருடன் போலீஸ்’ புகழ் கார்த்திக் ராஜு இயக்கத்தில், ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், ராஜ் சேகர் வர்மா தயாரிப்பில், ரெஜினா கசாண்ட்ரா நடித்த ’சூர்ப்பனகை’ (தமிழ்) திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளை எஸ்பி சினிமாஸ் வாங்கியுள்ளது

நல்ல மற்றும் தனித்துவமான உள்ளடக்கத்தால் இயக்கப்படும் திட்டங்கள் ஒரு புகழ்பெற்ற பிராண்டின் Midas தொடுதலைப் பெறும்போது, அது திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக மாறும். SP சினிமாஸ் தமிழ் திரையுலகின் மதிக்கப்படும் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்று. அந்த நிறுவனம், இது போன்ற நம்பிக்கைக்குரிய திட்டங்களை தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது.

ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸின் திரு. ராஜ் சேகர் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்த ’சூர்ப்பனகை’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளை SP சினிமாஸ் இப்போது கைப்பற்றியுள்ளது.

அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களை வழங்கி திரையுலகில் நற்பெயர் பெற்றுள்ளது SP சினிமாஸ். குறிப்பிடத்தக்க வகையில், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் முறையான உத்திகளைத் திட்டமிடுதல், வர்த்தக வட்டத்தில் இணக்கமான மற்றும் நம்பகமான விதிமுறைகளை உறுதி செய்தல், படத்திற்கான கவனக்குவிப்பை ரசிகர்களிடையே உருவாக்குதல் மற்றும் பெரிய திரை எண்ணிக்கையை எளிதாக்குதல் ஆகியவற்றில் இந்நிறுவனம் சிறப்புத் தகுதியைப் பெற்றுள்ளது. ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், SP சினிமாஸின் கோல்டன் டச் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறது. ‘சூர்ப்பனகை’ படத்திற்கும் இதன் மூலம் சிறப்பான கவனம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

ஃபேண்டசி- த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ‘சூர்ப்பனகை’ திரைப்படம், 1920கள் மற்றும் தற்போதைய காலம் என இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையாகும். சில தனித்துவமான பழங்கால பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். இது சில மர்மமான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. அக்ஷரா கவுடா, ஜேபி, மன்சூர் அலி கான், ஜீவா ரவி, மைக்கேல், கௌஷிக், யோகி, ரவிராஜா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

உலகளாவிய வெளியீடு: SP சினிமாஸ்,
தயாரிப்பு: ராஜ் சேகர் வர்மா,
தயாரிப்பாளர்: ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ்,
இயக்குநர்: கார்த்திக் ராஜு,
இசை: சாம் சிஎஸ்,
ஒளிப்பதிவாளர்: கோகுல் பெனாய்,
படத்தொகுப்பு: சாபு ஜோசப்,
கலை இயக்குநர்: சீனு,
சண்டைப் பயிற்சி: சூப்பர் சுப்புராயன்,
பாடலாசிரியர்: சாம் சிஎஸ்,
நடனம்: ஷெரிப்,
வண்ண மேற்பார்வையாளர்: க்ளென் காஸ்டினோ,
திட்ட வடிவமைப்பாளர்: கே. சதீஷ் (சினிமாவாலா),
கிரியேட்டிவ் ஹெட்: அஷ்வின் ராம்,
ஒலிக்கலவை: டி.உதய் குமார் (நாக் ஸ்டுடியோஸ்),
DI: ஃபயர் ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்,
கலரிஸ்ட்: ஸ்ரீகாந்த் ரகு,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்,
ஆடை வடிவமைப்பாளர்: ஜெயலட்சுமி,
வடிவமைப்பு: Tuney 24AM,
தயாரிப்பு நிர்வாகி: கே.ஆர்.பாலமுருகன்

Must Read

spot_img