கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தான் அரசியலில் இறங்கப் போவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு வரும் 2026 தேர்தலில் தான் போட்டியிட போவதாக கூறி அதுவரை இன்னும் இரண்டு படங்களில் நடித்து முடித்து விடுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஷால் தானும் அரசியல் கட்சி துவங்கப் போவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஏற்கனவே இவர் ஆர் கே நகர் தொகுதியில் போட்டி போடுவதற்காக பட்ட பாடுகள், நடந்த கூத்துகள் நாடறிந்தது. இருந்தாலும் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் கட்சி துவங்குவேன் என்று கூறியுள்ளார் விஷால். விஜய் அரசியல் கட்சி துவங்கியதால் அவருக்கு போட்டியாக இவரும் இறங்கி விட்டதாக சொல்லப்பட்டது.
அதேபோல தற்போது ஹரி டைரக்சனில் இவர் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரில் விஷால் ஒரு மிகப்பெரிய கெட்ட வார்த்தையை பேசுகிறார். என்னடா இந்த அளவிற்கு வந்துவிட்டார் என்று ஆச்சரியப்பட வேண்டாம்.
இதே போன்ற.. இல்லை இல்லை இதே வார்த்தையை தான் லியோ படத்தில் நடிகர் விஜய்யும் பேசி அதனால் பல பேரின் கண்டனத்திற்கும் ஆளானார்.. விஜய் மட்டும் பேசலாம் நான் பேச கூடாதா என்பது போல தான் விஷாலும் இந்த வார்த்தையை பேசியுள்ளார். இயக்குனர் ஹரி ஆக இருந்தாலும் விஷால் சொல்வதைக் கேட்டுத் தானே ஆகவேண்டும்.