spot_img
HomeNewsதேடிவந்த ஆஸ்தான இயக்குனருக்கு கதவை சாத்திய அஜித்

தேடிவந்த ஆஸ்தான இயக்குனருக்கு கதவை சாத்திய அஜித்

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக இந்த படத்தை இயக்குவதற்காக பேசப்பட்டு வந்தவர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன்.

ஆனால் இப்போது அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை தான் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வழங்கியிருக்கிறார் அஜித். எல்லாம் மார்க் ஆண்டனி வெற்றி செய்த மாயம். அதேசமயம் விஷ்ணுவர்த்தனை ஏன் விலக்கிவிட்டார் என்று ஆச்சரியப்பட வேண்டாம்.

தனது அடுத்த படத்தை இயக்குவதற்காக விஷ்ணுவர்த்தனை அவர் அழைத்த சமயத்தில் அவர் இங்கே தமிழில் முரளியின் தம்பி அறிமுகமாகும் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அடுத்ததாக இந்தி படத்தை இயக்குவதற்கும் ஒப்பந்தமாகி இருந்தார். அதனால் அஜித் படத்தை இயக்க முடியாத சூழல் இருந்தது.

இதனை தொடர்ந்து கொஞ்ச நாள் கழித்து இந்தி படத்தின் வேலைகள் தாமதமாகவே அஜித்திடம் சென்று உங்கள் படத்தை இயக்குகிறேன் என விஷ்ணுவர்தன் கேட்டுள்ளார். ஆனால் அஜித் முதலில் அவர் மாட்டேன் என்று சொன்ன கோபத்தில் பரவாயில்ல இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி கதவை அடைத்துவிட்டாராம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img