spot_img
HomeNewsஅடப்பாவி.. விஷால் இவ்வளவு ஏழையா ? அவரே சொன்ன தகவல்

அடப்பாவி.. விஷால் இவ்வளவு ஏழையா ? அவரே சொன்ன தகவல்

நடிகர் விஷாலை பொருத்தவரை பல சமயங்களில் அவர் பப்ளிசிட்டி ஸ்டாண்ட் அடிப்பார். ஏதாவது பிரச்சினைகளை பேசும்போது பரபரப்பாக சில விஷயங்களை பேசி கொஞ்ச நாளைக்கு அதைப் பற்றியே அனைவரையும் பேச வைத்து விடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் விஷால் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சைக்கிளில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதேசமயம் கடந்த முறை தேர்தலில் ஓட்டு போட நடிகர் விஜய் இதேபோன்று சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியதால் விஜய்யை பார்த்து விஷாலும் காப்பி அடிக்கிறார் என்று அனைவரும் சொன்னார்கள். காரணம் இந்த முறை விஜய் கூட காரில் வந்து தான் ஓட்டு போட்டார்.

ஆனால் விஷாலிடம் இது பற்றி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போது. என் வீட்டில் என் அம்மா, அப்பாவிற்கு தான் கார் இருக்கிறது. என்னிடம் கார் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் விற்று விட்டேன். என்னிடம் இருப்பது சைக்கிள் மட்டும் தான். அதனால்தான் வாக்களிக்க சைக்கிளில் வந்தேன்.

இது என்ன பிரமாதம் ? காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு ரத்னம் படத்தின் லொகேஷன் ஷிப்ட் செய்யும்போது 84 கிலோமீட்டர் இரண்டரை மணி நேரத்தில் சைக்கிளிலேயே சென்றேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி இன்னொரு ஆச்சரியத்தையும் கொடுக்கிறார் விஷால்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img