spot_img
HomeNewsஇந்த நடிகர் படத்தை தவறாமல் பார்த்து விடுங்கள் ; ரெகமெண்ட் பண்ணும் சமந்தா

இந்த நடிகர் படத்தை தவறாமல் பார்த்து விடுங்கள் ; ரெகமெண்ட் பண்ணும் சமந்தா

மலையாள நடிகர் பகத் பாசில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம் தன்னை வெகு நாட்களுக்கு பேச வைத்து விடுவார். புஷ்பா 2 படத்தில் வில்லன் போலீசாகட்டும், விக்ரம் படத்தில் உளவாளி கதாபாத்திரமாகட்டும், மாமன்னன் படத்தில் ஜாதி கட்சி தலைவராக இப்படி எல்லாவற்றிலும் தனி முத்திரை பதித்து வருவதால் ரசிகர்கள் மட்டுமன்றி திரை உலக பிரபலங்கள் கூட இவரது நடிப்புக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர்,

இவர் படம் தமிழிலோ, மலையாளத்திலோ, தெலுங்கிலோ எதில் வெளியானாலும் முதல் ஆளாக பார்த்து விடுவது என பல பேர் இருக்கின்றனர், அந்த வகையில் நடிகை சமந்தா சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

“இந்த படத்தில் நான் நினைத்த, நான் விரும்புகின்ற அத்தனை பைத்தியக்காரத்தனங்களும் இருக்கின்றன. அதை அழகாக பகத் பாசில் செய்துள்ளார். தயவுசெய்து பகத் பாசில் படத்தை யாரும் மிஸ் பண்ணி விடாதீர்கள்” என்று தனது பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சமந்தா.

சமந்தாவும் பகத் பாசிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img