கடந்த 20 வருடங்களாக தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் கொடி கட்டி பறப்பவர் நடிகை தமன்னா. அதுவும் கடந்த வருடம் ஜெயிலர் படத்தில் அவர் நடித்ததும் அந்த படத்தில் காவாலா பாடலுக்கு ஆடிய நடனமும் தென்னிந்தியாவை தாண்டி வடக்கே உள்ள ரசிகர்களையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. அந்த அளவிற்கு பயங்கரமான ஆட்டம் போட்டிருந்தார் தமன்னா.
தொடர்ந்து கதை அம்சம் உள்ள படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது பையா படம் கூட ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மும்பை சைபர் கிரைம் போலீசார் தமன்னாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளதுடன் ஏப்ரல் 29 இல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் அதில் கூறியுள்ளனர்.
அப்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பும் அளவுக்கு தமன்னா என்ன செய்தார் என்றால், கடந்த 2023 இல் மகாதேவி என்கிற செயலியில் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை சட்டவிரோதமாக தமன்னா ஒளிபரப்பு செய்ததாக புகார் எழுந்தது. ஆதலால் இந்த போட்டிகளை ஒளிபரப்ப உரிமை பெற்ற நிறுவனம் பெரிய இழப்பை சந்தித்ததாக கூறப்பட்டது.
அந்த நிறுவனம் அளித்த புகாரின் பேரில் தான் தற்போது தமன்னாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமன்னா எதற்காக இப்படி கிரிக்கெட் லீக் போட்டியை எல்லாம் ஒளிபரப்பும் அளவிற்கு இறங்கினார். அவரிடம் காசு இல்லையா என்ன என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.