spot_img
HomeNewsஅஜித் படமே பண்ண போறது இல்ல.. அப்புறம் டைட்டிலை வச்சு என்ன பண்ண ? இந்தா...

அஜித் படமே பண்ண போறது இல்ல.. அப்புறம் டைட்டிலை வச்சு என்ன பண்ண ? இந்தா பிடி

கடந்த 30 வருடங்களாக திரையுலகில் இருந்தாலும் கடந்த பத்து வருடங்களில் தான் நடிகர் அருண் விஜய் என்றால் யார் என்று ரசிகர்களுக்கு தெரிய வந்தது. குறிப்பாக தடையறத் தாக்க படத்தை தொடர்ந்து அஜித்துடன் அவர் இணைந்து நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் அவரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது என்றால் கூட மிகை இல்லை. இந்த நிலையில் தற்போது அருண் விஜய்க்கு என ஒரு தனி வியாபார மார்க்கெட் உருவாகிவிட்டது. அவர் நடிக்கும் படங்களும் வரவேற்பை பெற்று வருகின்றன.

தற்போது அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு ரெட்ட தல என அஜித்தின் பட்டப்பெயர் வரும் விதமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அஜித்திற்கு தல என்கிற டைட்டிலை கொடுத்தது தீனா படம் மூலம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்தான்.

இந்த டைட்டிலையும் அவர்தான் பதிந்து வைத்திருந்தார். இப்போது அவருடைய உதவியாளர் திருக்குமரன் என்பவர் தான் அருண் விஜய் நடிக்கும் இந்த படத்தை இயக்குவதால் தன் சிஷ்யருக்காக இந்த டைட்டிலை விட்டுக் கொடுத்து விட்டார் முருகதாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img