spot_img
HomeNews200 கோடி வசூல் பார்த்தவர்களுக்கு வாங்கிய தொகையை திருப்பித்தர மனமில்லை ; பாய்ந்தது வழக்கு

200 கோடி வசூல் பார்த்தவர்களுக்கு வாங்கிய தொகையை திருப்பித்தர மனமில்லை ; பாய்ந்தது வழக்கு

பணம் வருவதற்கு முன்பு அதை வேண்டும் என்று கேட்பவர்கள் நடந்து கொள்ளும் விதமே தனியாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு அந்த பணம் மூலம் இன்னும் அபரிமிதமான லாபம் கிடைத்துவிட்டால் அதன் பிறகு அவர்களுடைய சுபாவமே மாறிவிடும்.

அப்படித்தான் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற திரைப்படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று 200 கோடி அளவில் வசூலித்தது,

இந்த படத்திற்கு கேரளாவை சேர்ந்த சிராஜ் என்பவர் 7 கோடி ரூபாய் பைனான்ஸ் அளித்திருக்கிறார். அவருக்கு படத்தின் லாபத்தில் நாற்பது சதவீதம் கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது படம் வெளியாகி 200 கோடி சம்பாதித்த நிலையில் படத்தை தயாரித்தவர்களுக்கு லாபத்தை மட்டுமல்ல. அவர் கொடுத்த அசலை கூட திருப்பித் தர மனமில்லாமல் இழுத்து அடித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்கை அதிரடியாக முடக்கியது நீதிமன்றம். அது மட்டுமல்ல இது குறித்து விசாரித்து அவர்கள் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

தற்போது இது குறித்து விசாரித்த காவல்துறை படத்தின் தயாரிப்பாளர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிந்துள்ளது. இதெல்லாம் தேவையா ? பலபேர் தாங்கள் நட்டமடைந்த படத்திற்கே வாங்கிய தொகையை திருப்பி கொடுத்து பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் சூழலில் இவ்வளவு லாபத்தை பார்த்ததும் வாங்கிய தொகையை, ஓரளவு டீசண்டான லாப பங்கு தொகையை கொடுப்பதற்கு மனமில்லை என்றால் என்ன சொல்வது ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img