அஜித் கொடுத்த பணத்தை வாங்காமல் கெத்து காட்டி பட வாய்ப்பை இழந்த இயக்குனர்

0
60

நடிகர் அஜித்தை பொறுத்தவரை தனக்கு ஒருவர் பிடித்து விட்டால் அவருக்கு எந்த அளவிற்கு இறங்கி உதவி செய்வார் என்று அவரிடம் அப்படி உதவி பெற்றவர்கள் பலர் பேட்டியில் சொல்ல கேட்டிருக்கிறோம். அப்படி உதவி பெற்று உயர்ந்தவர்கள் பலர் உண்டு. அப்படி பெற்ற உதவியை தக்க வைக்காமல் காணாமல் போனவர்களும் பலர் உண்டு.

அதே சமயம் அவர் உதவி செய்ய முன்வந்து அதை மறுத்து ஒதுக்கிய ஒரு இயக்குனர் அந்த வாய்ப்பையே இழந்த தகவல் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார். இயக்குனர் ராதா மோகனின் படங்களில் ஆஸ்தான கதாசிரியராக பணியாற்றி வருபவர் வசனகர்த்தா விஜி. இவர் பிரபுதேவா நடித்த அள்ளித்தந்த வானம் மற்றும் பிரித்திவிராஜ் நடித்த வெள்ளித்திரை ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

ஒரு முறை இவர் ஒரு தயாரிப்பாளர் ஒருவருடன் அஜித்தை சென்று சந்தித்து கதை சொல்ல முயற்சித்துள்ளார். அப்போது நீங்கள் கதை எல்லாம் சொல்ல வேண்டாம்.. உங்கள் படத்தில் நான் நடிக்கிறேன்.. அது உறுதி.. அதே சமயம் இப்போது என்னிடம் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் அவருக்கு நீங்கள் இந்த படத்தை இயக்கிக் கொடுங்கள்.. உங்கள் தயாரிப்பாளருக்கு அடுத்த படத்தை நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார்..

இருந்தாலும் நாம் ஒரு தயாரிப்பாளரை அழைத்து வந்துவிட்டு அவருக்கு பதிலாக வேறொரு தயாரிப்பாளரை, வாய்ப்பு கிடைக்கிறதே என்று ஒப்புக்கொண்டால் நன்றாக இருக்கிறது என தயங்கியுள்ளார் விஜி. இதனை பார்த்த அஜித் உடனே தனது மேஜை டிராயறில் இருந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் எடுத்துக் கொடுத்து நான் இந்த படம் பண்ணி முடித்துவிட்டு வருவதை 8 மாதம் நீங்கள் என்ன செய்வீர்கள் இதை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்துள்ளார்.

உடனே நாக்கில் சனி அமர்ந்து கொண்டது போல, நீங்கள் என்னுடைய தயாரிப்பாளருக்கு படம் பண்ணுகிறீர்கள் என்று முடிவாகிவிட்டால் தயாரிப்பாளர் தானே எனக்கு பணம் கொடுக்க வேண்டும்.. நீங்கள் எதற்கு கொடுக்கிறீர்கள் என்று கேட்டதும் அஜித்திற்கு கோபம் வந்து விட்டதாம்.

திரையுலகில் இந்த அளவிற்கு எல்லாம் வெளிப்படையாக நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் என்று கூறினாராம அஜித். அதற்கு பிறகு வந்த நாட்களில் அஜித்துடன் அந்த படம் நடக்காமலே போய்விட்டது என்று கூறியுள்ளார் கதாசிரியர் விஜி. காலம் வரும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இதைத்தான் சொல்லி இருக்கிறார்களோ பெரியவர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here