spot_img
HomeNewsஸ்டார் பட வியாபாரத்தை தொடர்ந்து சம்பளமாக விரல்களை அதிகமாக உயர்த்தும் கவின்

ஸ்டார் பட வியாபாரத்தை தொடர்ந்து சம்பளமாக விரல்களை அதிகமாக உயர்த்தும் கவின்

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தவர். நடிகர் கவின் அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் கடந்த வருடம் வெளியான டாடா திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று கவினுக்கு தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கவனமாக தனது படங்களை தேர்வு செய்து வருகிறார் கவின்.
அந்த வகையில் அவர் தற்போது நடித்துள்ள படம் ஸ்டார். இந்த படத்தை இளன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் படம் பார்த்த விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்த படம் திருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். நல்ல விலை கொடுத்து இந்த படத்தை வாங்கி வருகிறார்கள் என்கிற தகவல் திரையுலக வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக ஆகிவிட்டது.
அதுமட்டுமல்ல தனது படங்களுக்கென ஒரு மார்க்கெட் உருவாகி வருவதால் நடிகர் கவினும் தனது சம்பளத்தை பற்றி யார் கேட்டாலும் ஒரு கையையும் தாண்டி இன்னொரு கைவிரல்களையும் கணிசமாக உயர்த்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. சரி காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என அவர் நினைப்பதிலும் தவறில்லையே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img