spot_img
HomeNewsவிஜய் தேவரகொண்டாவும் அனிருத்தும் சேர்ந்து எதிர்கொள்ளப் போகும் சோதனை

விஜய் தேவரகொண்டாவும் அனிருத்தும் சேர்ந்து எதிர்கொள்ளப் போகும் சோதனை

தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் என்பவர் இயக்குகிறார். முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
ரஜினி, விஜய்க்கு எல்லாம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தது போல இந்த படத்திலும் விஜய் தேவரகொண்டாவிற்கு அலப்பறை கிளப்பும் பாடல்களை அனிருத்தும் கொடுப்பார் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது.
இந்த படத்தில் பாடல்களை இல்லையாம். லோகேஷ் கனகராஜின் கைதி படம் போல பரபரப்பாக ஒரே நாளில் நடப்பது போன்று இந்த படத்தின் கதை உருவாகி உள்ளதால் பாடல்கள் படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கும் என்பதால் பாடல்களே இல்லாமல் இந்த படம் தயாராகிறது,
ஆனால் பாடல்களில் விட்ட இடத்தை பின்னணி இசை மூலம் இந்த படத்தில் நிரப்ப இருக்கிறாராம் அனிருத். விஜய் தேவரகொண்டாவுக்கு மட்டுமல்ல அனிருத்துக்கும் கூட இப்படி பாடல்கள் இல்லாத படத்தில் முதன்முதலாக பணியாற்றுவது ஒரு சவாலான விஷயமாகத்தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img