spot_img
HomeNewsரஜினியை தொடர்ந்து சமந்தா படத்திற்கும் கடன் வாங்கி வைக்கப்பட்ட டைட்டில்

ரஜினியை தொடர்ந்து சமந்தா படத்திற்கும் கடன் வாங்கி வைக்கப்பட்ட டைட்டில்

நடிகை சமந்தா முன்பு போல வதவதவென படங்களில் நடிப்பதில்லை. ஒரு பக்கம் திரைப்படம் இன்னொரு பக்கம் வெப் சீரிஸ் என சம முக்கியத்துவம் கொடுத்து நடிக்க துவங்கியுள்ளார். கடந்த வருடம் அவர் நடித்த புராண படமான சாகுந்தலம் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. அதே சமயம் விஜய் தேவரகொண்டா உடன் நடித்த குஷி திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்றது.
இந்த குஷி திரைப்படம் கூட ஏற்கனவே ஒரு பக்கம் பவன் கல்யாண் தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற படத்தின் டைட்டில் தான். இந்த நிலையில் சமந்தா தெலுங்கில் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கும் அதே பவன் கல்யாண் நடித்து அதேசமயம் தோல்வியடைந்த ஒரு படத்தின் டைட்டிலை தான் வைத்துள்ளார்கள். அந்த படத்தில் பெயர் பங்காரம்.
சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு கூட ஏற்கனவே பி.வாசு இயக்கத்தில் சரத்குமார் நடித்த கூலி என்கிற படத்தின் டைட்டிலை தான் மீண்டும் வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img