spot_img
HomeNewsரத்தினம் விமர்சனம் ...

ரத்தினம் விமர்சனம் ஒரு சத்திரியன் சாணக்கியனான கதை

 விஷால் ப்ரியா பவானி சங்கர் சமுத்திரகனி யோகி பாபு ஒய் ஜி மகேந்திரன் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் ரத்தினம்
   ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்தினம்
   கதைக்களம் வேலூர் எம்எல்ஏவாக இருக்கும் சமுத்திரகனிக்கு வலது கரமாக இருக்கும் விஷால் பணத்திற்காக ரவுடிசம் செய்யாமல் கொள்கைக்காக கொலை செய்பவர்கள்
 நீட் எக்ஸாம் க்கு வரும் பிரியா பவானிசங்கரை கொலை செய்ய ஒரு கூட்டம் அலைய அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறார் விஷால் காரணம் தன் தாயைப் போல பிரியா பவனி சங்கர்  இருப்பதால்
   பிரியா பவானி சங்கருக்கு பின்னால் ஒரு குடும்பம் அந்த குடும்பத்தின் இடத்தை ஆக்கிரமித்து மெடிக்கல் காலேஜ் கட்டி இருக்கும் மந்திரியின் பினாமி அதை மீட்க போராடும் குடும்பம் அந்த குடும்பத்திற்கு துணை நிற்கும் விஷால்
   இறுதியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒரு கிளைமேக்ஸ்
   ஹரி படம் என்றால் அருவாள் அடிதடி அதிகமாக இருக்கும் என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த படத்தில் அறுவாலும் அடிதடியும் மூன்று மடங்கு அதிகம் ரத்தினம் என்பதற்கு பதிலாக ரத்தம் என்று படத்திற்கு பெயர்  வைத்திருக்கலாம் அந்த அளவுக்கு படத்தில் ரத்தம் தெளிக்கிறது
 விஷால் இவரும் அடிதடிக்கு பெயர் போனவர் தான் இந்தப் படத்தில் அடிதடியில் ஒரு அலப்பறை செய்கிறார் நல்ல வேலை டூயட் இல்லாத காரணத்தால் நமக்கு ஒரு நிம்மதி ஏற்படுகிறது பிரியா பவானி சங்கரை காப்பாற்றும்போது இவர் சொல்லும் ஒரு டயலாக் ஒரு பொண்ணுக்கு ஆபத்து என்றால் ரோட்ல போற நாயே  குலைக்கும் போது நான் மனுஷன் சும்மா இருக்க முடியுமா இவர் நாயை பெருமைப்படுத்துறாரா இல்ல மனுஷனை சிறுமை ப்படுத்துகிறாரா என்று தெரியவில்லை அதேபோல் நாங்கள் காசுக்காக ரவுடிசம் செய்பவர்கள் இல்லை கொள்கைக்காக கொலை செய்பவர்கள் என்று கூறும் வசனம் தியேட்டரில் சிரிப்பலை வீசுகிறது படத்தில் விஷால் கத்தி கத்தி வசனம் பேசுவது ஏன் என்று தெரியவில்லை
   பிரியா பவானி சங்கர் நாயகி தன் கடமையை சிறப்பாக செய்திருக்கிறார்
   யோகி பாபு நகைச்சுவைக்கு மிகவும் சிரமப்பட்டு வசனம் பேசி சிரிப்புக்கு சில்லறை கூட தேறாமல் தோற்றுப் போய் இருக்கிறார்
   எம்எல்ஏவாக சமுத்திரகனி ஒரு நடுநாயகமான கதா கதாபாத்திரம் சிறிது அலட்டலுடன் அருமையாக செய்திருக்கிறார்
  படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் படத்தின் கிளைமாக்ஸ் இவரிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது இவரின் கதாபாத்திரத்தை விவரித்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விடும் அதனால் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
    இசை தேவி ஸ்ரீ பிரசாத் இசையை அலற விட்டிருக்கிறார் இயக்குனர் ஹரி வேகத்திற்கு இன்னும் வேகம் சேர்க்க இவரின் இசை வேகமாக பயணிக்கிறது டோன்ட் ஒரி டோன்ட் டா பாடல் விஷால் ரசிகனுக்கு கொண்டாட்டம்
 மக்களின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது அந்த மாற்றத்திற்கு ஏற்றபடி தான் படங்களும் வந்து கொண்டிருக்கின்றன ஆனால் இயக்குனர் ஹரி இன்னும் மாறவில்லை
 ரத்தினம்____ ஒரு சத்திரியன் சாணக்கியனான கதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img