ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் வெளியாகி 28 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது அதன் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தையும் எட்டி விட்டது. இந்த வருடத்தில் குறிப்பாக ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த படத்தை ரிலீஸ் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே சமயம் சமீபகாலமாக ஏற்கனவே ஹிட்டான படங்களை ரீ ரிலீஸ் செய்து பலர் கல்லா கட்டி வருகிறார்கள். அந்த வகையில் கமல் நடித்த இந்தியன் படத்தையே ரிலீஸ் செய்தால் இந்த சமயத்தில் அதிக அளவில் ரசிகர்கள் அந்த படத்தை பார்ப்பார்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் முடிவு செய்துள்ளாராம்.
சமீபத்தில் அவர் தயாரிப்பில் உருவான கில்லி அவருக்கு மிகப்பெரிய அளவில் வசூலை வாரி தந்துள்ளது. அந்த நம்பிக்கையில் இந்தியன் படத்தையும் ரீ ரிலீஸ் செய்யலாம் என நினைத்த அவருக்கு அந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றவர் விரைவில் அந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக தகவல் வந்ததும் ஷாக் ஆகிவிட்டாராம்.
படம் ஓடிடியில் வெளியாகிவிட்டால் அதன் பிறகு ரீ ரிலீஸ் செய்தும் பெரிய பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் என்பதால் அந்த முடிவை ஏ எம் ரத்னம் ஒத்தி வைத்து விட்டதாக தெரிகிறது.