spot_img
HomeNewsகேஜிஎஃப் ஹீரோ - சாய் பல்லவி படத்திற்கு உருவான புதிய பிரச்சனை

கேஜிஎஃப் ஹீரோ – சாய் பல்லவி படத்திற்கு உருவான புதிய பிரச்சனை

சில இயக்குனர்களுக்கும் ஹீரோக்களுக்கும் இந்த ராமாயண, மகாபாரத புராணத்தை விட்டால் வேறு கதையே கிடைக்காது என்பது போல அதிலிருந்து ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்த கதையை படமாக தயாரித்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டில் தற்போது ராமாயணத்தை மையப்படுத்தி ராமாயணம் என்கிற பெயரிலேயே ஒரு படம் உருவாகி வருகிறது.

அனிமல் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்க நம்ம ஊர் சாய் பல்லவி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். கே ஜி எஃப் புகழ் நடிகர் யஷ் இந்த படத்தில் முக்கிய இடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல இந்த படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவராகவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

ஆனால் ஏற்கனவே இந்த படத்தை மூன்று பேர் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. அதில் இரண்டு பேர் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டவர் மூன்றாவதாக இருக்கும் நபருடன் இணைந்து தான் யஷ் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் வெளியேறிய தயாரிப்பு நிறுவனத்தில் ஒன்று இந்த படத்திற்கான உரிமை எங்களிடம் தான் இருக்கிறது. அதை இன்னும் முறையாக இப்போது தயாரிக்கும் நிறுவனம் பெறவில்லை. அதை முறைப்படி முடித்து விட்டு தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என புதிய பிரச்சினை ஒன்றை கிளப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img