சூர்யா நடித்த ஜெய் பீம் என்கிற படத்தை இயக்கி அந்த ஒரு படத்தின் மூலியமாக மிகப்பெரிய புகழ்பெற்றவர் இயக்குனர் த.செ.ஞானவேல். அந்த படத்தின் வெற்றிதான் அவருக்கு தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.
ஜெய் பீம் படத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களை போலீசார் எப்படி அராஜகமாக நடத்துகின்றனர், அவர்களுக்கு எப்படி நீதி கிடைக்க வேண்டும் என போராடுவது போல கதை அம்சத்தை உருவாக்கி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்,
ஆனால் தற்போது நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அனைவரும் அந்த கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பகிரங்கமாகவே வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளார் இயக்குனர் ஞானவேல்.
பொதுவாக திரையுலகை சேர்ந்த பெரும்பாலானோர் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும் கூட அது குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஞானவேல் இப்படி பேசியது ஏதோ உள்நோக்கத்தில் தான் என்றும் இப்படிப்பட்டவர் எப்படி சமூக நீதி பற்றி எல்லாம் பேசுகிறார் என்றும் அவரை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.