spot_img
HomeNewsஅந்த வார்த்தையை விஷால் பயன்படுத்தி இருக்க கூடாது ; இனி புலி வாலை பிடித்த கதை...

அந்த வார்த்தையை விஷால் பயன்படுத்தி இருக்க கூடாது ; இனி புலி வாலை பிடித்த கதை தான்

நடிகர் விஷால பொறுத்தவரை ஏதாவது பிரஸ்மீட்டில் பேசினால் மிகப் பயங்கரமாக உணர்ச்சிவசப்பட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிடுவார். பின்னர் சில நாட்களில் அதற்காக மன்னிப்பும் கூட கேட்டுக் கொள்வதும் வழக்கம் தான். அப்படி சமீபத்தில் அவர் பேசியபோது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தனது படங்களை வெளியிடுவதில் தடை விதிக்க முயற்சிக்கிறது என்று பரபரப்பாக குற்றம் சாட்டினார்.

மேலும் 2026-ல் தானும் அரசியலுக்கு வருவதாக ஒரு அதிர்ச்சி தகவலையும் அளித்தார். அவர் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அதை அறிவிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அதே சமயத்தில் அவர் அப்படி கூறும்போது நான் மற்றவர்களைப் போல இப்போது வருவேன் அப்போது வருவேன் நேரம் வரும்போது வருவேன் என்று எல்லாம் சொல்ல மாட்டேன் நிச்சயமாக 2026 வருவேன் என்று கூறினார்.
அதாவது ரஜினிகாந்த் இதற்கு முன்பு அவரிடம் இப்படி அரசியல் பற்றி கேட்கப்படும் போதெல்லாம் கூறிய பதில்களை வைத்து அவரையே விமர்சிக்கும் விதமாக அப்படி எல்லாம் நான் செய்ய மாட்டேன் துணிச்சலாக முடிவு எடுத்து வருவேன் என்று விஷால் கூறியுள்ளார். இந்த வார்த்தையை அவர் பயன்படுத்திருக்க கூடாது.
காரணம் இதற்கு முன்பு சீமான், ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியபோது பலமாக எதிர்த்து வாய்க்கு வந்ததை பேசினார். அதன்பிறகு ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று தெரிந்ததும் ரஜினியை புகழ ஆரம்பித்தார். ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு அவர் மீதான கோபம் குறையவில்லை. இப்போது அரசியலில் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க போராடிவரும் சீமான் ரஜினிகாந்தை டீசன்டாக விமர்சித்து இருந்தாலோ அல்லது விமர்சிக்காமல் இருந்திருந்தாலோ தாராளமாக ரஜினி ரசிகர்களிடம் உங்கள் வாக்கை எனக்கு செலுத்துங்கள் என்று கேட்கும் தகுதி இருந்திருக்கும். அதை தொலைத்து விட்டு இப்போது தடுமாறுகிறார் சீமான்.
விஜய்யும் அரசியலுக்கு வரப்போவதாக கூறியுள்ளார். அவரும் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் விசயத்தில் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து ரஜினியை அவமரியாதை செய்து விட்டார் என்றே ரஜினி ரசிகர்கள் கருதுகின்றனர். அது மட்டுமல்ல ஒரு படி மேலே போய் விஜய் ரசிகர்கள் இப்போதும் ரஜினியை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால் ரஜினியின் வாக்குகள் அவருக்கும் ஆதரவாக கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது.
இப்போது அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்கிற விஷாலாவது ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுப்பார் என்று நினைத்தால் அவரும் தேவையில்லாமல் தனக்குத்தானே சூடு வைத்துக் கொண்டுள்ளார். இனி வருவதை அவர் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img