நடிகர் விஜய்யின் திரையுலக பயணத்தில் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் பங்கு மிகப் பெரியது. விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த செந்தூரப்பாண்டி படம் மூலமாக தான் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களிடம் அறிமுகமானார் விஜய். அதை தொடர்ந்து படிப்படியாக தன்னை விஜய் வளர்த்துக்கொண்டார்.
அதே சமயம் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான போது எந்த விதமான ஆதரவையும் விஜய் அவருக்கு தரவில்லை. தற்போது விஜயகாந்த் மறைந்த போது கூட ராகவா லாரன்ஸ் விஜய்யின் மகனுடன் தான் ஒரு படத்தில் இணைந்து நடித்த தருகிறேன் இன்று பெருந்தன்மையுடன் கூறியிருந்தார்.
அதே சமயம் விஜயகாந்தின் மறைவின் போது நடிகர் அஜித் ஒரு இரங்கல் செய்து கூட தெரிவிக்காத நிலையில், நடிகர் விஜய் அவ்வளவு கூட்டத்திலும் நெரிசலிலும் நேரில் வந்து விஜயகாந்துக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியது நெகிழ்ச்சி அடையும் விதமாக இருந்தது.
இந்த நிலையில் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயகாந்தையும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்கிற தொழில்நுட்பம் மூலமாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினார்கள். இது குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்திடம் கோரிக்கையும் வைத்தார்கள்.
எலக்சன் டைம் என்பதால் பிஸியாக இருந்தாலும் இவர்களுக்கென நேரம் ஒதுக்கிய பிரேமலதா “ எப்போதுமே விஜய் கேட்டால் விஜயகாந்த் நோ என்றே சொல்ல மாட்டார்.. நான் எப்படி சொல்ல முடியும்.. அது மட்டுமல்ல வெங்கட் பிரபுவும் விஜய்யும் நான் சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்தவர்கள் தான். அதனால் நிச்சயமாக விஜயகாந்தை அவர்கள் படத்தில் பயன்படுத்திக் கொள்ளட்டும்” என்று கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்