spot_img
HomeNewsஎப்போ பண்ண போற ? கல்யாணத்தை விட இன்னொரு விஷயத்தை அடிக்கடி கேட்கும் விஷால் அம்மா

எப்போ பண்ண போற ? கல்யாணத்தை விட இன்னொரு விஷயத்தை அடிக்கடி கேட்கும் விஷால் அம்மா

தினத்தந்தியில் கன்னித்தீவு என்கிற படக்கதை பல வருட காலமாக நீண்டு கொண்டே வருகிறது. ஏதாவது ஒரு விஷயம் இழுத்துக் கொண்டே போனால் என்ன கன்னித்தீவு கதையா என்று சொல்லும் அளவிற்கு திரையுலகை பொறுத்தவரை நடிகர் விஷாலின் திருமணமும் இதோ அதோ என்று பல வருடங்களாக இழுத்துக் கொண்டே வருகிறது.

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்ததும் அதில் தான் என் திருமணம் என்றார். அதன்பிறகு சல்மான் கான், பிரபாஸ் போன்றவர்களே இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்யட்டும் நான் செய்கிறேன் என்று அவ்வப்போது விதவிதமாக உருட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் மூன்றாவது முறையாக அவர் நடித்துள்ள ரத்னம் என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிகழ்வில் விஷால் கலந்து கொண்டு பேசும்போது, என் அம்மா இயக்குனர் ஹரியின் தீவிர ரசிகை.. நீ எப்போது திருமணம் செய்து கொள்கிறாய் என்று கேட்பதைவிட நீ அடுத்ததாக எப்போது ஹரியின் படங்களில் நடிக்கப் போகிறாய் என்று தான் அடிக்கடி கேட்பார்கள் என்று தனது அம்மா எந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என கூறினார் விஷால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img