spot_img
HomeNewsசூர்யாவிடம் தான் பிரச்சனையா ? நடப்பதெல்லாம் அப்படித்தான் சொல்கிறது

சூர்யாவிடம் தான் பிரச்சனையா ? நடப்பதெல்லாம் அப்படித்தான் சொல்கிறது

நடிகர் சூர்யா திரை உலகில் நுழைந்த காலகட்டத்திலும் சரி.. வளர்ந்து வந்த காலகட்டத்திலும் சரி.. இயக்குனர்களின் நடிகராக தான் வலம் வந்தார்.. ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக திரையுலகில் மட்டுமல்ல, ரசிகர்களுமே கருதுகிறார்கள். அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை..

காக்க காக்க படம் மூலம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் கௌதம் மேனன். அடுத்து வாரணம் ஆயிரம் என இன்னொரு வெற்றியும் கொடுத்தார். அடுத்ததாக துருவ நட்சத்திரம் என்கிற படத்தை சூர்யாவை வைத்து ஆரம்பித்தார்.. கௌதம் மேனன் தரப்பில் தாமதமா அல்லது சூர்யாவுக்கு கதை பிடிக்கவில்லையா இதில் எது என்று தெரியவில்லை.. ஆனால் இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார் சூர்யா. அந்த படத்தை தான் மீண்டும் விக்ரமை வைத்து இயக்கினார். கௌதம் மேனன்.

அதற்கு அடுத்ததாக ஹரி டைரக்சனில் அருவா என்கிற படத்தில் சூர்யா நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஹரியின் கடைசி இரண்டு படங்கள் ஓடாததால் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பாத சூர்யா அருவா படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.. அதன் பிறகு அருண் விஜய், விஷால் என பயணித்து வருகிறார் இயக்குனர் ஹரி.

இதே போல தான் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்கிற படத்தில் ஒப்பந்தமானார் சூர்யா. அதன் பிறகு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. பிறகு பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு அந்த படத்தில் இருந்தும் சூர்யா வெளியேறினார்.

அதேபோல வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. அதற்காக சில பயிற்சிகளும் எடுத்தார். ஆனால் இன்னும் அந்த படம் படப்பிடிப்பு லெவலுக்கு செல்லவில்லை. ஒரு பக்கம் சூர்யா கங்குவா படத்திலும் இன்னொரு பக்கம் வெற்றிமாறன் விடுதலை-2 படத்திலும் பிஸியாக இருப்பதால் இதை முடித்துவிட்டு அதை ஆரம்பிப்பார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்கிற படத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்பு துவங்கப் போகிறது என்று சொல்லப்பட்ட நிலையில் அதுவும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக லேட்டஸ்ட் அறிவிப்பு வெளியானது. இந்த படமாவது படப்பிடிப்புக்கு செல்லுமா ? இல்லை இதுவும் முந்தைய படங்களின் பட்டியலில் சேருமா ? அப்படியானால் இதில் பிரச்சனை யாரிடம் ? சூர்யாவிடமா அல்லது படத்தின் இயக்குனர்களிடமா ? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img