spot_img
HomeNewsதள்ளிப்போடா பையா ; கில்லியாக எகிறும் விஜய்

தள்ளிப்போடா பையா ; கில்லியாக எகிறும் விஜய்

பெரும்பாலும் பல வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஹிட் ஆன படங்கள் தற்போது அடிக்கடி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை முன்பு பெற்ற அதே போல பெற்று வருகின்றன. அதுமட்டுமல்ல சில படங்கள் இந்த ரீ ரிலீஸிலும் வசூலை வாரி குறித்து வருகின்றன.

அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த பையா திரைப்படம் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியானபோது இருந்த அதே ஆரவாரம் வரவேற்பு எல்லாவற்றையும் தியேட்டர்களில் பார்க்க முடிந்தது. அது மட்டுமல்ல நல்ல வசூலையும் அள்ளியது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான கில்லி திரைப்படமும் நாளை (சனிக்கிழமை) வெளியாகிறது. விஜய்யின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அது அமைந்தது. இந்த படத்தில் விஜய் திரிஷா ஜோடி ரொம்பவே பிரபலமானது.

இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 600 திரையரங்குகளில் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் தயாரித்த இந்த படம் இந்த அளவிற்கு ரீ ரிலீசிலும் அதிக அளவில் திரையரங்குகளில் வெளியாவதால் இதன் வசூல், முடங்கிக் கிடக்கும் ஏ எம் ரத்தினத்தை மீண்டும் மேலே கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img