spot_img
HomeNewsநீங்க யாரை நினைக்கிறீங்களோ அவர்களைத்தான் குறிக்குது ; போட்டு உடைத்த அமீர்

நீங்க யாரை நினைக்கிறீங்களோ அவர்களைத்தான் குறிக்குது ; போட்டு உடைத்த அமீர்

தமிழில் பொதுவாகவே அரசியல் படங்கள் வருவது சமீப காலமாக குறைந்து விட்டது. 90களில் அதிக அளவிலான அரசியல் படங்கள் வந்தன. ஆர்.கே செல்வமணி, மணிவண்ணன் போன்றவர்கள் தைரியமாக அரசியலை கிண்டல் செய்து விமர்சித்து படம் எடுத்தனர்.

ஆனால் இப்போது யார் அப்படி படம் எடுத்தாலும் தங்களை தான் விமர்சிப்பதாக, கிண்டலடிப்பதாக நினைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியினர் அந்த படங்களை எடுப்பவர்களுக்கு எதிராக குடைச்சல் கொடுத்து படத்தையே வெளியிடாமல் பண்ணி விடுகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் ஆதம்பாவா என்பவர் துணிச்சலாக அமீரை கதாநாயகனாக வைத்து உயிர் தமிழுக்கு என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் தமிழக அரசியலை பற்றிய நையாண்டி படமாக தான் உருவாகி உள்ளது.

தேர்தலுக்கு முன்னாடி இந்த படம் வெளியே வந்தால் மக்கள் மனதில் ஏதாவது சலசலப்பை ஏற்படுத்தி விடும் என்று நினைத்து இதை வெளியிட விடாமல் தடுத்தனர் என்றும் சொல்லப்பட்டது. தற்போது இந்த படம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் பல அரசியல்வாதி  கதாபாத்திரங்கள் நடப்புக்கால அரசியலில் உள்ள அரசியல் தலைவர்களை குறிக்கும் விதமாக இருக்கிறது. இதுபற்றி சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் அமீர் பேசும்போது, அரசியலை விமர்சித்தோ கிண்டலடித்தோ படம் எடுக்கும்போது சில காட்சிகளை நடப்பு அரசியலுடன் சேர்த்து தான் வைக்க வேண்டும். அதை பார்க்கும் போதே இந்த அரசியல்வாதி யார் என்று பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்.

அப்படி செய்யாமல் அரசியல் நையாண்டி படத்தை எப்படி எடுக்க முடியும் ? இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களை பார்த்து நீங்கள் யார் என நினைத்துக் கொள்கிறீர்களோ அவர்கள்தான் என உறுதி செய்து கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக வெளிப்படையாகவே போட்டு உடைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img