spot_img
HomeNewsஎஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கத்தில், கே...

எஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கத்தில், கே பாக்கியராஜ், ரேகா நடிப்பில் ‘குஸ்கா’

எஃப் எம் கலைக்கூடம் சார்பாக எஸ் நாராயணன் மற்றும் எஸ் சரவணகுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நாயகனாக கிஷோர் அறிமுகமாக, இணையாக சஸ்வதா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர்-நடிகர் பாக்கியராஜ், ரேகா, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா ஒரு பன்முகப்பட்ட கலைஞர், இயக்குனர் மற்றும் நடிகர். தனது திரைத்துறைப் பயணத்தை நாடக மேடைகளில் துவங்கி, திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் என அனைத்து தளங்களிலும், இயங்கி வருகின்ற ஒரு படைப்பாளி.

குஸ்கா, சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வுபூர்வமான கதை. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குனர் மிகவும் நளினமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் சாலை விபத்தின் தாக்கத்தை, இது வரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் கிஷோர் – சஸ்வதா இணையுடன், கே பாக்கியராஜ், ரேகா, அப்புக்குட்டி, டி பி கஜேந்திரன், அனுமோகன், மயில்சாமி, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, வெங்கல் ராவ், முல்லை தனசேகர், கோதண்டம், அம்பானி சங்கர், சேலம் சுமதி, அண்ணாதுரை கண்ணதாசன், படத்தின் இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் பலர் நடித்திருகின்றனர். வில்லனாக ஜெரால்ட் நடித்திருக்கிறார்.

எம் எஸ் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஜி ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குனராக கே கலை நடராஜ் பங்காற்றி இருக்கிறார்.

சண்டைகாட்சி அமைப்புகளுக்கு ஓம் பிரகாஷ், ஸ்டில்ஸ் கே பி பிரபு, நடனம் ஜே ஜே சந்துரு, வடிவமைப்பு கம்பம் சங்கர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், கதை-திரைகதை-வசனம்-பாடல்கள் எழுதி, இசையமைத்து, பி என் சி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
கிஷோர் (அறிமுகம்)
சஸ்வதா
ஜெரால்ட்
கே பாக்கியராஜ்
ரேகா
அப்புக்குட்டி
டி பி கஜேந்திரன்
மயில்சாமி
மேனேஜர் கிறுஷ்ணமூர்த்தி
வெங்கல் ராவ்
முல்லை தனசேகர்
கோதண்டம்
அம்பானி சங்கர்
சேலம் சுமதி
அண்ணாதுரை-கண்ணதாசன்
பி என் சி கிருஷ்ணா
தயாரிப்பு: எஃப் எம் கலைக்கூடம் – எஸ் நாராயணன், எஸ் சரவணகுமார்
கதை-திரைகதை-வசனம்-பாடல்கள் – இசை-இயக்கம்: பி என் சி கிருஷ்ணா
நிர்வாக தயாரிப்பு: கே என் ஆர் சாமி
ஒளிப்பதிவு: எம் எஸ் ராஜா
படத்தொகுப்பு: ஆர் ஜி ஆனந்த்
பாடல்கள்: பி என் சி கிருஷ்ணா
கலை: கே கலை நடராஜ்
சண்டை பயிற்சி: ஓம் பிரகாஷ்
ஸ்டில்ஸ்: கே பி பிரபு
நடனம்: ஜே ஜே சந்துரு
வடிவமைப்பு: கம்பம் சங்கர்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img