spot_img
HomeNewsRJ பலாஜி தொகுத்து வழங்கும் Mind voice  

RJ பலாஜி தொகுத்து வழங்கும் Mind voice  

Jiosaavn இந்தியாவில் இணைய ஆடியோ நிகழ்ச்சி சேவையை 2016 ஏப்ரல் முதல் வழங்கி வரும் நிறுவனம் ஆகும். கதைசொல்லிககள், சுயாதீன தாயாரிப்பாளர்கள், தன்முனைப்பு கலைஞர்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்கி வருகிறது. காமெடி முதல் பாப் கலாச்சாரம் வரை, விளையாட்டு,  அரசியல், சினிமா என பலவகையிலான 100க்குமேற்பட்ட நிகழ்ச்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு அளித்து, பலமான நிறுவனமாக வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் முன்னனி நிறுவனமாக வளர்ந்து வரும் Jiosaavn தமிழ் ரசிகர்களுக்கு பிரத்யேகமாக RJ பலாஜி தொகுத்து வழங்கும் Mind voice   எனும் நிகழச்சியை தொடங்கியுள்ளது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது

Jiosaavn நிறுவன உலக சந்தையின் விநியோக துணை அதிகாரி  ஆதித்யா காஷ்யப் பேசியது…

முதலில் பாட்காஸ்ட் என்றால் என்னவென்று சொல்லிடுறேன். இது இணையத்தில் இருக்கும் ஆடியோ ஷோ எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். இந்த நிகழ்ச்சி புதுமையானதாக இருக்கும் எங்க தரப்பில இருந்து யோசித்த போது  இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க RJ பாலாஜியை   தவிர  வேறு யாரும் சரியாக இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்தோம். எந்த சமூக விசயத்துக்கும் முன்னுக்கு வந்து நிற்பவர் அவர் . அவருடன்  இணைந்து இந்த நிகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி. தமிழ் மொழியில் ரசிகர்களை ஈர்ப்பதில் இந்த நிகழ்ச்சி பெரிதளவில் உதவும் என்றார்.

R J பாலாஜி பேசியது….

முதலில் பாட்காஸ்ட் என்னன்னு எனக்கும் புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது. இது ஒரு ரேடியோ ஷோ இணையத்தில் இருக்குற ரெடியோ. நான் ஏன் இதுல அப்படின்னு கேட்டா , இது இப்ப முடிவு பண்ணியதில்ல. வெகுகாலம் முன்பே முடிவு செய்தது. Jiosaavn உலகம் முழுக்க இயங்குற நிறுவனம், இவங்களோட இணைஞ்சு என்ன பண்ணலாம்னு நினைச்சு 100க்கும் மேல ஐடியா பிடிச்சு இத பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். இந்த நிகழ்ச்சி இன்றைய சூழ்நிலையில அவசியம்னு தோணுது. இன்றைய இளைஞர்கள் எல்லா விசயங்கள் மீதும் கோபப்படுறத மட்டும் தான் முழு வேலையா அவங்களோட கடமையா வச்சுருக்காங்க. கோபப்படுறத மட்டுமே சமூகத்துக்கு செய்யற முக்கிய மாற்றமா எல்லோரும் நினைக்கிற காலமா இது இருக்கு. இது மாறனும். முக்கியமான விசயங்கள மறைச்சு தேவையில்லாத விசயங்கள செய்திகள் முன்னிலைப்படுத்தி நம்மள பதட்டப்படுத்தியே வச்சுருக்காங்க. இத மாத்துற நிகழ்ச்சியா, பேச மறுக்கற மறக்கற விசயங்கள பேசற நிகழ்ச்சியா இது இருக்கும். இதுல சமூகத்தின் காரசார விசயங்கள் மட்டுமில்லாம விளையாட்டு, சினிமா என எல்லாத்தையும் பத்தி பேசற நிகழ்ச்சியா இருக்கும். இது எனக்கு புதுசா இருக்கற அதே நேரம் சமூகத்துக்கு சொல்ல வேண்டிய கடமையாவும் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img