spot_img
HomeNewsமாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

வரலட்சுமி சரத்குமார் ஆரவ் மகத் சுப்ரமணிய சிவா மற்றும் பலர் நடிக்க ஆஹா ஓட்டிட்டியில் வெளியாகி இருக்கும் படம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

கதைக்களம் மகத்தை காதலிக்கும் வரலட்சுமி சரத்குமார்

மகத் ஒரு சமூக விரோத செயலைப் பார்த்து காவல் நிலைய ஆய்வாளரிடம் சொல்ல அந்த ஆய்வாளர் மகத்தை அந்த சமூக விரோதியிடம் அழைத்துச் செல்ல கொலை செய்யப்படுகிறான் மகத்

தன் காதலனை கொலை செய்தவனே பழிவாங்க துடிக்கும் வரலட்சுமி சரத்குமார் தன் காதலனின் நண்பர்கள் உடன் இணைந்து கொலையாளிகளை பழிவாங்க வியூகம் வகுக்க அதே நேரத்தில் வேறு யாரோ அவர்களை கொன்று விடுகிறார்கள் அவர்கள் யார் என்று விசாரிக்க ஏ சி பி ஆரவ் விசாரணையை தொடங்க பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வருகிறது

இறுதியில் கொலையாளி யார் என்று தெரிய வரும் போது நமக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது கொலையாளி யார் என்று தெரிந்து கொள்ள ஆஹா தமிழ் ஓ டி டி தளத்தை பாருங்கள்

வரலட்சுமி சரத்குமார் எஸ்ஐ கதாபாத்திரம் அவருக்கு மிகப் பொருத்தம் என்று சொல்லலாம் என்று நாம் எண்ணும்போது அவர் உடல் எடை இளைத்து கம்பீரத்துக்கு பதில் பரிதாபப்பட வைக்கிறது அவரது எஸ் ஐ கதாபாத்திரம் காதலனுக்காக பழிவாங்க துடிக்கும் வசனங்களில் உயிரோட்டம் இல்லை காதலில் ஒரு அழுத்தமும் இல்லை ஒரு கவிதைத்தனமும் இல்லை இதற்கு வரலட்சுமி குறை சொல்ல முடியாது இயக்குனரை தான் சொல்ல முடியும்

ஆரவ் இடைவெளிக்கு ஒரு நிமிடத்திற்கு முன்புதான் தான் வருகிறார் இடைவெளிக்குப் பிறகு இவர் ராஜ்ஜியம் தான் ஒரு காவல்துறை மேலதிகாரியாக தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் அவர் உடல்வாகு காக்கிச்சட்டைக்கு ஒரு கம்பீரத்தை தருகிறது அவர் கண்கள் பல வசனங்களை பேசுகிறது அவர் துப்பறியும் விதத்தை பார்த்தால் ஒரு நிஜ போலிஸ் அதிகாரி போல் இருக்கிறது தமிழ் சினிமாவில் அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பது இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்

மகத் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பு

இயக்குனர் சுப்பிரமணிய சிவா வில்லனாக அலட்டல் இல்லாமல் அமைதியாக மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார் வருங்கால வில்லன் வரிசையில் அவர் பெயர் இடம் பெறப்போவது உறுதி

மற்றவர்களும் அவரவர் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர் இசை மணிகாந்த் கத்திரி பிரபல சக்ஸஸ் போன் வித்வான் கத்திரிக் கோபால்நாத் அவர்களின் மகன் இவரின் பங்களிப்பு இந்தப் படத்திற்கு மிக அதிகம் இசையின் மூலம் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறார்

இயக்குனர் தயாள் பத்மநாபன் இவர் கன்னடத்தில் பல படங்களை இயக்கியிருக்கிறார் தமிழில் கொன்றால் பாவம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இந்தப் படத்தை கிரைம் திரில்லர் கதையை ஒரு விறுவிறுப்பான திரைக்கதையாக அமைத்து இயக்கி இருந்தாலும் திரைக்கதையில் பல ஓட்டைகள் அடைக்க மறந்து விட்டார்

மகத் ஒரு சமூக விரோத செயலை தன் செல்போனில் படம் பிடித்து அதை தன் காதலியான எஸ் ஐ வரலட்சுமிக்கு ஏன் அனுப்பவில்லை

எஸ்ஐ வரலட்சுமி இடம் செல்போன் பேசிக் கொண்டிருக்கும்போது சமூக விரோத செயலைப் பார்த்து அதை அவரிடம் கூறாமல் ஏன் அந்தப் பகுதியில் இருக்கும் ஆய்வாளரிடம் வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து புகார் அளிக்கிறார்

அதேபோல் சமூக விரோதிகளிடம் மாட்டிக் கொண்ட மஹத் மெதுவாக பேசி என்னவென்று புரியாமல் வரலட்சுமிக்கு whatsapp செய்வது ஏன் அந்த நேரத்தில் அழகாக டைப் செய்து இருக்கலாமே

விவரம் தெரிந்த வயதில் சிறுவனான மகத்தை அனாதை ஆசிரமத்தில் சமூக விரோதி விட்டு செல்ல அவனை யார் என்று விசாரிக்காமல் அந்த அனாதை ஆசிரமத்தில் ஏற்றுக் கொண்டார்களா என்பது தெரியவில்லை தன் பெயரை சொல்லத் தெரிந்த சிறுவனுக்கு தன் தந்தை பெயர் மற்றும் வீட்டு விலாசத்தை சொல்லத் தெரியாதா

காவல் நிலையத்திலேயே இருவர் கொலை செய்யப்படுவது அதுவும் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்வது காதில் பூ சுற்றுவது போல் இல்லை பெரிய மாலையை காதுக்கு போடுவது போல் உள்ளது

படப்பிடிப்பு 21 நாட்களில் முடித்து விட்டதாக இயக்குனர் கூறினார் அதன் பலவீனம் அவர் காட்சிகளில் தெரிகிறது நாடகத்தனமான காட்சி அமைப்பு குறைந்த நாட்களில் படம் பிடிப்பது தவறில்லை அதை குவாலிட்டியாக இருப்பது தான் முக்கியம்

தயாரிப்பாளரும் அவரை என்பதால் சிக்கனத்தை படத்தில் பார்க்க முடிகிறது இன்னும் குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் பக்கங்கள் பல வரும் அதனால இத்துடன் முடித்துக் கொள்கிறோம்

மாருதி நகர் போலீஸ்– ஸ்டேஷன ஒரு மேடை நாடகம்

Must Read

spot_img