spot_img
HomeNewsமாவீரன் விமர்சனம்

மாவீரன் விமர்சனம்

சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் மிஷ்கின் யோகி பாபு மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம் மாவீரன்

கதைக்களம் தினசரி பத்திரிகையில் மாவீரன் எனும் கார்ட்டூன் கதாபாத்திர படம் வரைந்து கதை சொல்லும் நாயகன் தன் குப்பத்தை வீடு காலி செய்து அரசு தந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் போது வீட்டு கட்டுமான பணியில் பல முறைகேடுகள் நடந்துள்ள காரணத்தால் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் ஆங்காங்கே விரிசல்கள் எதிர்த்து கேட்க முடியாத நாயகன் தன் மனக்குமுறல்களை தான் எழுதும் மாவீரன் கார்ட்டூன் கதை மூலம் வெளிப்படுத்துகிறான்

இந்நிலையில் தன் தங்கையின் கைப்பிடித்து இழுத்தவனை எதிர்த்து கேள்வி கேட்க வக்கில்லாதவன் என்று தாய்க்கூற மனம் உடைந்த நாயகன் தற்கொலைக்கு முயற்சி செய்ய அதற்கும் தைரியம் இல்லாமல் தற்கொலை முயற்சி கைவிடும் நேரத்தில் கைப்பிடி இடிந்து நாயகன் கீழே விழ மருத்துவமனை அனுமதிக்க பட்ட நாயகன் மரணத்தின் பிடியில் சென்று வெளிவரும்போது அவனுக்கு மட்டும் ஒரு குரல் கேட்க அந்தக் குரல் நடக்கப் போவது அனைத்தும் முன்கூட்டியே சொல்ல அதன்படியே நடக்கிறது

அந்தக் குரல் மக்களுக்காக உன் உயிர் தருவாய் என குரல் ஒலிக்க தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள நாயகன் எடுக்கும் முயற்சியை நகைச்சுவையுடன் சமூக கண்ணோட்டத்தில் நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர்

சிவகார்த்திகேயன் படம் என்றாலே அந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு சராசரி மனிதனாக எந்த வம்பு தும்புக்கும் சொல்லாமல் மக்களோடு மக்களாக வாழும் ஒரு மனிதனாக ஒரு கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயனுக்காக வடிவமைத்துள்ளால் இயக்குனர் மடோனா அஸ்வின் சிவகார்த்திகேயனும் தன் கதாபாத்திரம் அறிந்து ஒரு எதார்த்த மனிதனாக படம் முழுக்க நம்மை அவருள் எடுத்து செல்கிறார்

நம்முள் அனைவருக்கும் ஒரு எண்ணம் இருக்கும் அநியாயம் நடக்கும்போது அதை தட்டிக் கேட்க உள் மனது சொன்னாலும் சந்தர்ப்ப சூழ்நிலை நம் வாழ்க்கை நிலைமை அறிந்து ஒதுங்கிப் போய் விடுவோம் இது 90 சதவீத மக்களின் இயல்பு அந்த 90% மக்களில் ஒருவனாக சிவகார்த்திகேயன் கதாபாத்திரம்

சில தோல்விகளில் துவண்டு போயிருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் மீண்டும் வெற்றி நாயகனாக ஆக்கி இருக்கிறது

நாயகி அதிதி சங்கர் படத்திற்கு ஒரு நாயகி தேவை அந்த தேவையை பூர்த்தி செய்துள்ளார் அதிதி சங்கர்

கதையின் நாயகன் என்று நான் சொன்னால் அது மிஸ்கின் தான் வில்லனாக மிரட்டி இருக்கிறார் ஒரு நடிகனுக்கு உரிய அந்தஸ்து அவருக்கு கிடைத்து விட்டதால் இனி வரும் படங்களில் அவரை நாம் பார்க்கலாம்

இயக்குனர் பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான சரிதா நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகனுக்கு தாயாக வாழ்ந்திருக்கிறார் இவரை பற்றி சொல்ல வார்த்தைகள் பற்றாக்குறை ஆகிவிடும்

இயக்குனர் மடோனா அஸ்வின் மண்டேலா படம் சமூக கருத்தையும் சமூக அவலங்களையும் நமக்கு சொல்லியது அதேபோல் இந்த மாவீரன் படத்திலும் அதை வேறு விதமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்

மாவீரன் இவன்—- வெற்றி வீரன்

Must Read

spot_img