spot_img
HomeNewsடைனோசர்ஸ் விமர்சனம்

டைனோசர்ஸ் விமர்சனம்

 புதுமுகங்கள் படையெடுக்க பழைய முகங்களும் இணைந்து வெளிவரா இருக்கும் படம் டைனோசர்ஸ்
 டைனோசர்ஸ் என்றவுடன் பெரிய மிருகம் என்று நினைக்க வேண்டாம் அதற்கு விளக்கம் படத்திலேயே இருக்கிறது 
கதைக்களம் வழக்கம்போல் வடசென்னை ரௌடிசத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் அதை புதிய பாணியில் சொல்லி இருக்கிறார் 
வட சென்னையில் இரண்டு மிகப் பெரிய தாத்தாக்கள் மத்தியில் ஏற்படும் பழிவாங்கல்கள் தனக்கு விசுவாசமாக இருக்கும் தன் அடியாளை எதிராளியிடம் போட்டுக் கொடுத்து அவனைப் போட வைத்து அதற்கான காரணம் கூறும் தாதா
 கொல்லப்பட்டவனின் நண்பனின் தம்பி தான் நாயகன் அவன் பழி வாங்குவான் என்று நாம் நினைத்தால் ரவுடிசத்தை வெறுப்பவனாக இருக்கிறான் முடிவில் பழி வாங்கினானா இல்லையா என்பதை மீதி கதை 
படத்தின் நாயகன் இவர் வடசென்னையில் பிறந்தாரா அல்லது வட சென்னை மக்களின் வாழ்வியலை படித்தாரா என்பது தெரியாத அளவுக்கு வடசென்னை வாசியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் வெட்டுப்பட்ட பிணத்தை வைத்துக்கொண்டு குடித்துவிட்டு ஆடும் ஆட்டத்தில் இருந்து பேசும் வசனம் வரை தியேட்டரில் கைத்தட்டு ஆர்ப்பரிக்கிறது 
அது மட்டும் அல்ல காதல் காட்சியிலும் நான் சளைத்தவன் இல்லை என நிரூபித்துக் காட்டி இருக்கிறார் 
தமிழ் திரை உலகம் எதிர்காலத்தில் இவர் பின் நிற்கும் என்பது ஐயம் இல்லை
 நாயகிக்கு காட்சி குறைவானாலும் நடிப்பு நிறைவாக செய்திருக்கிறார் 
மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்
 ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு தனித்தன்மை கொண்டது
 அந்த அளவுக்கு அறிமுக இயக்குனர் எம் ஆர் மாதவன் திறன் பட செய்திருக்கிறார்
 வழக்கமாக அருவாள் வெட்டு குத்து அடியாள் ரவுடி இந்த மாதிரி ரவுடிசத்தை கதைக்களமாக எடுத்துகொண்டிருப்பவர்கள் வன்முறைக்கு வன்முறை தான் தீர்வு என்ற கருத்தை தான் வலியுறுத்துவார்கள் ஆனால் இந்த படத்தில் இயக்குனர் எதிர்மறையான அதாவது பாசிட்டிவ் நிகழ்வுகளை நிகழ்த்தி இருக்கிறார்
 திரைக்கதை அவர் கையாண்ட விதம் வெகு நேர்த்தி எந்த ஒரு இடத்திலும் படத்தில் தொய்வு இல்லாமல் விறுவிறுப்புடன் அதே சமயம் மக்கள் ரசிக்கும் வண்ணம் காட்சிகளை அமைத்து கைத்தட்டல்களை அள்ளிச் செல்கிறார்

கிளைமாக்ஸ் காட்சியில் இவர் தந்திருக்கும் திருப்புமுனை ரவுடிகளுக்கு ஒரு எச்சரிக்கை என சொல்லலாம் 

தமிழ் சினிமா ஒரு நல்ல இயக்குனரை தானே தேடி கண்டுபிடித்துள்ளது அந்த இயக்குனரை உயரத்துக்கு அழைத்துச் செல்வது மக்கள் கையில் இருக்கிறது அது மக்கள் தியேட்டர் வருகையில் இருக்கிறது
அந்த எதிர்பார்ப்பை இந்த டைனோசர்ஸ் படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என்பது நமது மாறாத கருத்து

Must Read

spot_img