spot_img
HomeNewsஅரசியலில் நான் தனித்தே போட்டியிடுவேன் நடிகர் விஷால்

அரசியலில் நான் தனித்தே போட்டியிடுவேன் நடிகர் விஷால்

அரசியலில் நான் தனித்தே போட்டியிடுவேன் நடிகர் விஷால்

 தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது
     நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசினை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்
     அப்போது அவரிடம் நடந்த கலந்து உரையாடலில் அரசியலில் நீங்கள் யாருடன் இணைந்து பயணிப்பீர்கள் என்று கேட்டதற்கு
   நான் எப்போதுமே என்னுடைய சொந்தக் காலில் மட்டுமே நிற்பேன் அதேபோல் அரசியலில் நான் யார் தோளிலும் கை போட்டு பயணிக்க மாட்டேன் தனித்து நிற்பேன் தனித்தே போட்டியிடுவேன் என்று ஆணித்தரமாக கூறினார்
   மேலும் இந்த வருட இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்றும் அதில் நாடக நடிகர்களுக்காக தனி அரங்கம் அமைக்கப்பட்டு நாடகங்கள் நடத்தப்படும் மேலும் வெளியூர் நாடக நடிகர் தங்குவதற்கு இடவசதியும் செய்து தரப்படும் மற்றும் கல்யாண மண்டபம் கேளிக்கை விடுதி பொது நிகழ்ச்சி நடத்த மிகப்பெரிய மன்றம் என பல வசதிகளுடன் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என்று கூறினார்
   வரும் ஏப்ரல் 26 அன்று விஷால் நடிப்பில் ரத்தினம் படம் வெளி வருகிறது ரத்தினம் படம் அனைத்து மக்களும் பார்த்து ரசிக்கும் வண்ணமாக சிறப்பாக ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணமாக இருக்கும் என்று விஷால் ரத்தினம் படத்தை பற்றி கூறினார் மற்றும் துப்பறிவாளன் 2 படத்தைப் பற்றி மக்களிடம் மிகுந்து எதிர்பார்ப்பு இருக்கிறது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது என் கவனமெல்லாம் துப்பறிவாளன் 2 மிகச் சிறப்பாக வரவேண்டும் சிறப்பாக வரும் என்றார்
     திருமணத்தை பற்றி கேட்டதற்கு கண்டிப்பாக நடக்கும் கூடிய விரைவில் அதைப் பற்றி முறையான அறிவிப்பு வெளியாகும் என புன்னகையுடன் கூறினார் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவி கவிதா தலைமை தாங்கினார் துணைத் தலைவர் பரத் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பொருளாளர் ஒற்றன் துறை நன்றி உரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img