spot_img
HomeExclusiveசைமா குறும்பட போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்

சைமா குறும்பட போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சைமா’. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது ‘மேகம் செல்லும் தூரம்’ என்ற தனி இசை குறும்பட பாடலுக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் என்கிற சூர்யாவிற்கு வழங்கப்பட்டது.

பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளியானது. இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் இசையமைத்திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந்தார். மா.மோகன் பாடல் எழுதியிருந்தார்.

ஏற்கனவே இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் இசையும் பாடலும் மனதை தொடுவதாகவும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையிலும் இருந்தது என்று பாராட்டி இருக்கிறார்கள். தற்போது சைமா விருது பெற்றது மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது என்று இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ், மேற்கத்திய இசையில் திறமை பெற்று 16 வயதிலேயே லண்டனில் உள்ள ரிக்கார்டிங் லேபிள் கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த நிறுவனம் இவரது இசையில் உருவான பாடல்களை அமெசான், ஆப்பிள் ஐடியூன்ஸ, ஸ்பாட்டி பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இசைத்தளங்களில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img