spot_img
HomeNewsபி சி ஶ்ரீராம் 10 நாள் என்னுடன் வேலை பார்த்தார் ''இயக்குநர் மிஷ்கின்''

பி சி ஶ்ரீராம் 10 நாள் என்னுடன் வேலை பார்த்தார் ”இயக்குநர் மிஷ்கின்”

சைக்கோ” வெற்றி விழா ! 
Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன்
இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடிதிருந்தனர். கடந்த வாரம் வெளியான  இப்படம் விமர்சகர்களிடம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி,  ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றியடைந்துள்ளது.
படம் முழுதும் குவிந்திருக்கும் குறியீடுகள் கொண்ட ஆழ்ந்த திரைக்கதை, உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனனின் வித்தியாச நடிப்பு என “சைக்கோ” படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று “சைக்கோ” படக்குழு வெற்றியின் நிமித்தம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் பேசியது…
பத்திரிக்கை நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவே இந்த நிகழ்வு. இந்த படத்தை உதயநிதி நினைத்திருந்தால் அவரே தயாரித்திருக்கலாம் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்தை அழகாக வடிவமைத்து எடுத்ததற்கு மிஷ்கின் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றி.
நடிகர் பாவா செல்லத்துரை பேசியது…
எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் உயிருக்கு அதிகமான நேசிப்பையும், இந்தப்படம் நல்லா இல்லை  என சரிபாதியாக எதிரெதிர் விமர்சனம் வந்தது இந்தப்படத்திற்குதான். மிஷ்கின் படங்களில் உலகம் வேறு. அவர் திரையில் வாழ்வை சீட்டுக்கட்டை போல் பிரித்து போடுகிறார். அதில் நீங்கள் லாஜிக் தேடக்கூடாது. இந்தப்படம் மிஷ்கின் படம். அவரது சாயல் தான் படம் முழுதும் இருக்கும். அவர் கதாப்பாத்திரங்களை வித்தியாசமாக அணுகுகிறார். பாண்டியராஜன், பாக்கியராஜ் என நமக்கு தெரிந்த நடிகர்களை நாம் அவர்களை பார்க்காத கோணத்தில் காட்டுகிறார். நேரடி வாசகர்களுக்கு இந்தப்படம் நிறைய தடுமாற்றங்கள் தரும். மிஷ்கின் இப்படத்திற்குள் பல நுட்பங்களை நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமா மறக்க முடியாத படம் தந்த என் நண்பன் மிஷ்கின் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
நடிகர் சிங்கம் புலி பேசியது….

எல்லா இயக்குநருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகருக்கும் இருக்கும்.  அந்த ஆசை இந்த ஆண்டு எனக்கு நிறைவேறியிருக்கிறது. மிஷ்கினை  எப்படி %A

Must Read

spot_img