spot_img
HomeNewsதமிழக முதல்வருக்குஉடற்பயிற்சி கூடம் உரிமையளர்கள் சங்கம் கடிதம்

தமிழக முதல்வருக்குஉடற்பயிற்சி கூடம் உரிமையளர்கள் சங்கம் கடிதம்

உடற்பயிற்சி கூடத்தின் வாடகை செலுத்துவதிலிருந்து விலக்களிப்பது அல்லது வாடகை தொகையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாண்புமிகு தமிழக முதல்வருக்கு Tamilnadu Gym Owners Association (தமிழ்நாடு உடற்பயிற்சி கூடம் உரிமையளர்கள்) சங்கம் கடிதம்

பெறுநர் :

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்தமிழ்நாடு அரசுசென்னை

பொருள் : GYM வாடகை செலுத்துவதிலிருந்து விலக்களிப்பது அல்லது வாடகை தொகையை குறைப்பது பற்றி

மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு,

ஐயா இந்த கொரோனா தாக்குதல் காலத்தில் தங்களின் அரசின் உத்தரவுக்கு இணங்க சென்ற மார்ச் மாதம் 21ம் தேதி முதல் எங்களது உடற்பயிற்சி கூடங்களை அடைத்து அரசுக்கு முழு ஒத்துழைப்பையும ஆதரவையும் இது நாள் வரை நாங்கள் அளித்து வந்துள்ளோம்.

இந்த கொடிய நோயின் தாக்கம் அதிகமாக பரவி மக்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் மக்களின் மீது தாங்கள் கொண்ட பரிவு மற்றும் அக்கரையின் காரணமாக கடுமையாக உழைத்து தங்களின் அம்மாஅரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தால் மக்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் திறமையான ஆட்சியை எங்களின் TAMILNADU GYM OWNERS ASSOCIATION வெகுவாக பாராட்டி பெருமையுடன் வணங்குகிறது.

சில காலங்களின் இந்த கொரோனா தாக்கம் முடிந்து நாங்களும் மீண்டும் முழு உத்வேகத்துடன் எங்கள் பணிகளை தொடர்ந்து கடன் சுமை மற்றும் வறுமை இவை அனைத்திலிருந்தும் விடுபடுவோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால் எங்களால் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை.

மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சிக்கூடம் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்ட நிலையில் எந்தவிதமான வருமானம் இல்லாமல் எங்களின் வாழ்வாதாரமும் முதலீடும் மிகவும் பாதித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக உடற்பயிற்சி கூடத்தின் வாடகையும் செலுத்த முடியாமல் எங்கள் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் மிகவும் துயரத்துடன் நாங்கள் இன்று துன்ப வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் சில அமைப்புகளும், நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுடன் செயல்படத் தொடங்கின. அதனால் வாடகை தளத்தில் இயங்கும் எங்களின் உடற்பயிற்சி கூடங்களின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொடர்ந்து எங்களுக்கு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நிறந்தரமாக மூடும் சூழ்நிலையும் நிலவுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது போன்ற அபாய சூழ்நிலை நிலவுவதால் நாங்கள் மிகுந்த மன வேதனைகளுக்கு உள்ளாகியுள்ளோம். ஐயா எங்களுக்கு நிவாரணமோ உதவித் தொகையோ தங்களிடம் நாங்கள் கோரவில்லை. ஆனால்

ஐயா எங்கள் சுமையை குறைப்பதற்கு வணிக கட்டிட உரிமையாளர்களிடம் அவர்கள் வாடகை கேட்டு எங்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கும்படியும், வாடகைகளை குறைத்துக் கொள்ளும்படியும் வணிக கட்டிட உரிமையாளர்களுக்கு ஒரு ஆணை பிறப்பித்தால் தங்களின் தாயுள்ளம் கொண்ட அரசுக்கு நாங்கள் என்றுமே நன்றி உள்ளவர்களாக இருப்போம். இந்த ஒரு நிகழ்வு நடந்தால் உடற்பயிற்சி நிலையங்கள் மறுபிறவி எடுத்து முன்னேறி செல்லும்.

தங்களது அம்மா அரசின் ஆணை எங்களுக்கு கருணை அளிக்கும் என்று தமிழ்நாடு உடற்பயிற்சி கூடம் உரிமையளர்கள் சங்கம் மகிழ்ச்சிடன் காத்திருக்கிறோம் ஐயா.

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ ஐயா அவர்கள்‌ எங்களின்‌ குறைகளை நேரில்‌ தெரிவிக்க நேரம்‌ ஒதுக்கி தருமாறு மிகத்‌ தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

நன்றி!

இப்படிக்கு,

தமிழ்நாடு உடற்பயிற்சி கூடம் உரிமையளர்கள் சங்கம்

தங்களை வணங்கி எதிர்பார்க்கும்‌

Must Read

spot_img