spot_img
HomeNewsசித்தா விமர்சனம்

சித்தா விமர்சனம்

சித்தார்த்
நிமிஷா சஜயன்
அஞ்சலி நாயர்
சஹஷ்ரா ஶ்ரீ
S.ஆபியா தஸ்னீம்
பாலாஜி மற்றும் பலர் நடிக்க S. U. அருண் குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சித்தா கதைக்களம் அண்ணனின் மறைவிற்கு பிறகு அண்ணனின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்று இருக்கும் சித்தார்த் அந்த சிறுமி மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் இந்நிலையில் சித்தார்த்தின் நண்பனின் சகோதரி எட்டு வயது மகள் ஒரு காம பேயால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக அந்தப் பழி சித்தார்த் மீது விழ விரக்தியில் இருக்கும் சித்தார்த்த எங்கோ செல்ல அவரைத் தேடி சித்தார்த்தின் அண்ணன் மகள் தேடும்போது காம பேயால் கடத்தப்படுகிறான் அந்த சிறுமையை தேடும் சித்தார்த் பித்து பிடித்தவன் போல அலைய இறுதியில் சிறுமி கிடைக்க சந்தோஷப்பட வேண்டிய சித்தார் அதிர்ச்சி அடைகிறார் காரணம் என்ன விடையை காண சித்தா திரைப்படத்தை காணுங்கள்

படத்தை தயாரித்து நடித்திருக்கும் சித்தார்த்துக்கு இந்த படம் அவர் நடிப்பிற்கு ஒரு மைல் கல் துப்புரவு தொழிலாளர்களை கவனிக்கும் சூப்பர்வைசர் வேலை காணாமல் போன காதலியை துப்புரவு தொழிலாளியாக இவரிடமே வேலை செய்யும் காதலியிடம் பேச சித்தார்த் படும் திண்டாட்டம் வாலிப வயசுக்குரிய குறும்புகள்
குழந்தையை கொஞ்சம் சித்தப்பாவாக அப்படியே குழந்தையாக மாறிவிடுகிறார் நண்பனிடம் நட்பு பாராட்டும் போது அந்த நட்பு படம் பார்க்கும் நமக்கு அது போல் இல்லை என்று ஏக்கம் வர அளவுக்கு அவரின் நடிப்பு சிறப்பு

நாயகி கேரளத்து வரவு நம் பக்கத்து வீட்டுப் பெண்ணை பார்க்கும் எண்ணத்தை தன் நடிப்பின் மூலம் எதார்த்தமாக நம்மை கொள்ளை கொள்கிறார்
முக்கியமாக சிறுமி அது நடிப்பா அல்லது நிஜமா என்று எண்ணும் அளவுக்கு சிறப்பாக சிறப்பாக நடித்திருக்கிறார் கண்டிப்பாக விருது அவருக்கு காத்திருக்கிறது

இயக்குனர் கதையை கையாண்ட விதம் அருமை கதையை காதலில் ஆரம்பித்து நட்ப இடைச்சுருகி பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி திரைக்கதையை சிறப்பாக செதுக்கி படம் பார்க்கும் நம்மை ஒரு பரபரப்புடன் ஒரு பதைப்புடன் எதிர்பார்ப்புடன் படம் முடியும் வரை வைத்திருக்கிறார்

அதேசமயம் சிறுவர்கள் செல்போன் பயன்படுத்துவது ஆபத்தானது என்பதை நமக்கு புரியும் வண்ணம் புரிய வைத்திருக்கிறார்

சித்தா ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்

Must Read

spot_img