spot_img
HomeNewsசந்திரமுகி 2 விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்

17 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை புரிந்த சந்திரமுகி படத்தை இயக்குனர் வாசு சந்திரமோகி 2 படமாக்கி நம் பார்வைக்கு வைத்திருக்கிறார்
ராகவா லாரன்ஸ் கங்குனா வடிவேலு ராதிகா லட்சுமிமேனன் மஹிமா நம்பியார் சுபிக்ஷா ஒய் ஜி மகேந்திரன் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் பங்கு பெற வந்திருக்கும் சந்திரமுகி 2 கதை களத்தை பார்ப்போம்
மிகப்பெரிய குடும்பமான ராதிகாவின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டால் பிரச்சனைகள் தீரும் என குலதெய்வம் கோயிலுக்கு வர அங்கு ஒரு பங்களாவில் தங்கி குலதெய்வம் கோயிலை சுத்தப்படுத்தும் போது பல விரும்பத்தக்காத நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன ராகவா லாரன்ஸ் பிரச்சனைக்கான காரணம் தெரியும் போது இருநூறு வருடங்களுக்கு முன்பான சந்திரமுகி வேட்டையன் கதையை தெரிந்து கொள்ள வீட்டில் இருக்கும் லட்சுமி மேனன் மீது சந்திரமுகி ஆவி புகுந்து குடும்பத்தாரை பழிவாங்க முயல அதிலிருந்து எப்படி தப்பினார்கள் சந்திரமுகி வேட்டையனை கொன்றாளா அல்லது வேட்டையன் சந்திரமுகியை கொன்றானா என்பதை அறிந்து கொள்ள படத்தை பாருங்கள்

முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியினால் இரண்டாம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது அதை நிறைவேற்றி வைத்திருக்கிறதா சந்திரமுகி 2 என்றால் அது ஒரு கேள்விக்குறிதான்//?
பாகம் ஒன்றில் சூப்பர் ஸ்டார் மற்றும் வடிவேலின் நகைச்சுவை பெரிய வரவேற்பு பெற்றது ஆனால் ராகவா லாரன்ஸ் வடிவேலு கூட்டணி காமெடி நம் பொறுமையை சோதித்தது மட்டுமில்லாமல்வெறுப்பையும் வர வைக்கிறது
சரி வேட்டையன் கதாபாத்திரத்திற்கு ராகவா லாரன்ஸ் பொருந்தினாரா என்றால் அதுவும் ஒரு கேள்வி குறிதான் சூப்பர் ஸ்டாரையும் ராகவா லாரன்ஸையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது இருந்தாலும் கதாபாத்திரம் அவருக்கு பொருந்துகிறதா என்றால் பதில் பூஜ்ஜியமே

சரி நாயகி கங்கணா சந்திரமுகி கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தாரா என்றால் அதுவும் கேள்விக்குறியே??

வடிவேலு தன் பங்கை சிறப்பாக செய்தார் என்றால் அவருக்கு சரியான கூட்டணி இல்லாததால் அதுவும் கேள்விக்குறியில் நிற்கிறது
ராதிகா சரத்குமார் ரவி மரியா விக்னேஷ் மற்றும் பல பல கதாபாத்திரங்கள் தோன்றினாலும் எதுவும் மனதில் பதிய மறுக்கிறது
மகிமா நம்பியார் காதலுக்கும் டூயட்டுக்கும்

ஒரே ஆறுதல் லட்சுமி மேனன் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்

கோயில் குருக்கள் ஆக ஒய் ஜி மகேந்திரன் அவர் பங்களிப்பில் கதையின் ஓட்டம் ஆரம்பிக்கிறது அதுவும் உங்கள் பிரச்சனை தீர அதைவிட பெரிய பிரச்சனைக்கு வந்து இருக்கிறீர்களே என்ற வசனம் அவர் பாணியில் அவர் உச்சரிப்பில் சிறப்பு

பாடல்கள் அனைத்தும் நம்மை பெரிதாக ஈர்க்கவில்லை

சந்திரமுகி 1 வெற்றியின் பலத்தை நம்பி சந்திரமுகி 2 களம் இறங்கி இருக்கிறது ஆனால் பாகம் ஒன்றின் வெற்றியின் 10% கிடைக்குமா என்றால் அதுவும் கேள்விக்குறியே??

டைட்டிலை மாற்றி இருந்தால் படத்தை நாம் வேறு கோணத்தில் பார்த்திருப்போம் படமும் வெற்றியின் பாதையில் சென்றிருக்கும்

Must Read

spot_img