spot_img
HomeNewsஸ்ருதிஹாசனின் அன்புக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஜாக்பாட் பரிசு

ஸ்ருதிஹாசனின் அன்புக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஜாக்பாட் பரிசு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவர் நடிக்கும் 171 வது படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அந்த படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

இன்னும் இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என பெரிய அளவில் நட்சத்திரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும் இதில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் அதுவும் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஸ்ருதிஹாசன் இசையமைப்பில் இனிமேல் என்கிற ஒரு இசை ஆல்பம் வெளியானது. இதில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரை தேர்வு செய்தது ஸ்ருதிஹாசன் தானாம்.

அந்த அன்பிற்கு ஈடு செய்யும் விதமாக தற்போது தான் இயக்கும் படத்தில் ரஜினிக்கு மகளாக அவரை தேர்வு செய்து ஒரு ஜாக்பாட் பரிசை ஸ்ருதிஹாசனுக்கு கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img