spot_img
HomeNewsகமலின் இந்த சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யப் போகிறார்களா ? ஹீரோ யார் தெரியுமா...

கமலின் இந்த சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யப் போகிறார்களா ? ஹீரோ யார் தெரியுமா ?

 

பிரிக்க முடியாதது எது என்றால் தமிழ் சினிமாவும் ரீமேக் படங்களும் என்று சொல்லும் அளவிற்கு மலையாளத்தில் மற்றும் தெலுங்கில் வெளியாகி அவ்வப்போது ஹிட் ஆகும் சில படங்களை வாங்கி இங்கே ரீமேக் செய்வார்கள். ஆனால் பெரும்பாலும் அங்கே வெற்றி பெற்ற படங்கள் இங்கே ரீமேக்கில் மண்ணை கவ்வி விடுவது தான் வழக்கமாக நடந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ரஜினி, கமல் போன்ற பெரிய ஹீரோக்கள் நடித்த ஹிட்டான படங்களை இந்த காலத்திற்கு ஏற்றார்போல ரீமேக் செய்யலாம் என இன்னொரு குரூப்பும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ரஜினி நடித்த பில்லா படத்தை அஜித் ரீமேக் செய்து நடித்து வெற்றி பெற்றது போல நமக்கும் அப்படி ஒரு வெற்றி கிடைத்து விடாதா என்கிற நோக்கில் பலரும் இதுபோன்று ரஜினி, கமல் படங்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் கமல் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சத்யா. கமலின் ஆக்சனும் இளையராஜாவின் இசையும் சேர்ந்து அரசியல் பின்னணியில் உருவாகி இருந்த இந்த படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றின. இப்போதும் ரசிகர்களிடம் பேசப்படும் படமாக சத்யா இருக்கிறது

இந்த நிலையில் இந்த படத்தை இன்றைய காலத்திற்கு ஏற்றபடி ரீமேக் செய்ய இருக்கிறார்களாம். நாயகனாக அசோக் செல்வன் நடிக்கிறார் என்றும் அவருக்கு போர் தொழில் என்கிற படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா தான் இந்த படத்தை இயக்க உள்ளார் என்றும் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img